கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!

கல்லீரல் பாதிப்பு குணமாக

Kalleeral Prachanai

மனித உடலில் சருமத்துக்கு அடுத்துபடியாக மிகப்பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல்தான். இதனுடைய எடை சுமார் 1.2 கி.கி முதல் 1.5 கி.கி வரை இருக்கும். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கல்லீரலுக்கு உண்டு, அது என்னவென்றால் நோய் தொற்று அல்லது வேறு ஏதோ கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டால் அதை தானாகவே சரி செய்து கொள்ளும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு.

கல்லீரல் நம் உடலில் ஒரு நாளைக்கு 500 வகையான வேலைகளை செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? செரிமானத்திற்கு உதவும் பித்த நீர் முதல், இரத்தத்தை உறைய செய்யும் ரசாயனம் வரை அனைத்தும் கல்லீரல்தான் சுரக்கிறது.

கல்லீரல் பாதிப்பு இதழ் ஏற்றப்படுகிறது:-

இப்படிப்பட்ட கல்லீரலின் செயல்பாடுகள் மது அருந்துவதால் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை அதிகம் இருந்தாலும் மது அருந்துவதால் தான் கல்லீரல் அலர்ஜி நோய், கல்லீரல் கொழுப்பு நோய், கல்லீரல் புற்றுநோய், தாமிரத்தை வெளியேற்ற முடியாத காரணத்தால் ஏற்படும் வில்சன் நோய், ஐயர்ன் மெட்டபாலிசம் போன்ற கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் வருகின்றன.

மேலும் மைதா, சக்கரை, துரித உணவுகள், பொரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்படைகிறது.

கல்லீரல் பாதிப்பு குணமாக என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

40 வகை கீரைகள் மற்றும் அவற்றின் மருத்துவ பலன்கள்..!

கல்லீரல் அறிகுறிகள் (Kalleeral noi arikurigal):

  • வாய் துர்நாற்றம்.
  • செரிமான பிரச்சனை ஏற்படும்.
  • தொடர்ச்சியாக அடர்ந்த நிறத்தில் சிறுநீர் மற்றும் கழிவுகள் வெளியேறுவது.

கல்லீரல் பாதிப்பு குணமாக வைட்டமின் சி:

கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்கள் வைட்டமின் C சத்து அதிகம் நிறைந்துள்ள நெல்லிக்காயை தினமும் 3 முதல் 5 வரை உட்கொள்வதினால் கல்லீரல் பிரச்சனை குணமாகும்.

கல்லீரல் பாதிப்பு குணமாக பொன்னாங்கண்ணி:-

பொன்னாங்கண்ணிக்கீரையை தினமும் கூட்டாகவோ, பொரியலாகவோ அல்லது சூப் வைத்தோ சாப்பிட்டு வர கல்லீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

கல்லீரல் பாதிப்பு குணமாக ஆப்பிள் சீடர் வினிகர்:

கல்லீரலில் பிரச்சனையுள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக்கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்துவதினால். கல்லீரல் சுத்தமாகும். இவ்வாறு தினமும் மூன்று முறை அருந்தலாம்.

கல்லீரல் பாதிப்பு குணமாக அதிமதுரம்:-

இந்த கல்லிரல் பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாக அதிமதுரம் விளங்குகிறது. இந்த அதிமதுரத்தின் வேறை நன்கு பொடி செய்து. அந்த பொடியை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் சேர்த்து. நன்றாக கொதிக்க விடவும். பின் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் அருந்தலாம். இவ்வாறு அருந்துவதினால் கல்லீரல் பழம்பெரும்.

தினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன பயன் தெரியுமா..?

கல்லீரல் பாதிப்பு குணமாக அவகோடா மற்றும் வால்நட்ஸ்:-

கல்லீரல் நோய் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்றால் அவகோடா மற்றும் வால்நட்ஸ் இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil