வயிற்றுப்போக்கு பிரச்சனையா.! இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் போதும்..

Advertisement

வயிற்றுப்போக்கு உடனே நிற்க வீட்டு வைத்தியம்

நாம் சாப்பிடும் உணவு சில நேரங்களில் ஒத்துக்கொள்ளாமல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். வயிற்றுபோக்கு பெரிய பிரச்சனை இல்லை, ஆனால் இதனை சரி செய்யாமல் விட்டு விட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் சோர்வு ஏற்படும். அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை நிறுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

வயிற்றுப்போக்கு நிற்க:

தயிர்:

வயிற்றுப்போக்கு நிற்க

தயிரில் புரோபயாடிக் நிறைந்த பாக்டீரியா உள்ளது. இவை செரிமான மண்டலத்தில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தொற்று பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.  நாள் முழுவதும் தயிர் சாப்பிட வேண்டும். தயிர் சாப்பிடுவதால் இரைப்பை பிரச்சனையோ அமிலத்தன்மையோ ஏற்படாது. இல்லையென்றால் ஒரு கிளாஸ் மோர் குடித்தாலும் வயிற்றுப்போக்கை நிறுத்தலாம்.

வாழைப்பழம், நெய்:

வயிற்றுப்போக்கு நிற்க

வாழைப்பழத்தை தோலுரித்து பழத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டில் 1/2 தேக்கரண்டி நெய், ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய் பொடியாக நுணுக்கி கொள்ளவும். இந்த பொடியிலிருந்து 1/2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும்.

நெய் மற்றும் தயிர்:

வயிற்றுப்போக்கு நிற்க

சிறிதளவு சாதத்துடன் நெய் மற்றும் தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாகிவிடும்.

தயிர் மற்றும் இஞ்சி:

தண்ணீர் மற்றும் தயிரை சம அளவாக எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பதால் வயிற்றுப்போக்கை குறைக்கலாம்.

வயிற்று வலி குணமாக வீட்டு வைத்தியம்

இஞ்சி மற்றும் சர்க்கரை:

வயிற்றுப்போக்கு நிற்க

ஒரு கிண்ணத்தில் நறுக்கிய இஞ்சி சிறிதளவு, சிறிதளவு வெந்நீர், சர்க்கரை 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு இத ஒரு கிளாஸ் குடித்து வர வேண்டும்.

ஆப்பிள் மற்றும் ஜாதிக்காய்:

வயிற்றுப்போக்கு நிற்க

ஆப்பிள் பல சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனால் ஆப்பிளை சிறிதாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும். இதனுடன் ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய், நெய் சேர்த்து சமைக்க வேண்டும். இதனை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கை நிறுத்தலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் தேநீர்:

வயிற்றுப்போக்கு நிற்க

ஒரு கிளாஸ் கருப்பு டிகாஷன் எடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி சிறிதளவு மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கை நிறுத்தலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு:

வயிற்றுப்போக்கு நிற்க

ஒரு கிளாசில் வெந்நீர், தேன் சிறிதளவு, எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்து விடலாம்.

வயியற்றுப்போக்கு பிரச்சனையின் போது தவிர்க்க வேண்டியவை:

வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டால் நீர்ச்சத்து குறைய ஆரம்பித்து உடலி சோர்வடைய செய்யும், அதனால் நீர்ச்சத்து குறையாத அளவிற்கு தண்ணீர் அல்லது பழச்சாறு போன்றவை எடுத்து கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள், பால் போன்றவை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளை வயிற்றுப்போக்கு ஏற்படும் போது எடுத்து கொண்டால் மேலும் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம்
வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement