கலோரி குறைந்த உணவு | Low Calorie Food List in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கலோரி குறைந்த உணவுகள் பற்றி பார்க்கலாம். கலோரி என்பது ஒரு நாளைக்கு நமக்கு தேவையான ஆற்றலை கொடுப்பது. இந்த ஆற்றல் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்கிறது. ஆற்றல் (கொழுப்பு) அதிகமாகும் போது உடல் எடை அதிகரிக்கிறது, ஆற்றல் குறைவாகும் பொழுது உடல் எடை குறைந்து காணப்படும். உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க கலோரி குறைவாக உள்ள உணவுகளின் பட்டியல்களை பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை கலோரி தேவை:
ஆண்களுக்கு சராசரியாக 2,500 கலோரியும், பெண்களுக்கு 2,000 கலோரி ஒரு நாளைக்கு தேவை. அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்றவாறு கலோரிகள் தேவைப்படும்.
காலிபிளவர்:
Low Calorie Food in Tamil: காலிபிளவரில் குறைந்த அளவு கலோரி உள்ளது. மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
பீட்ரூட்:
Low Calorie Food List in Tamil: வைட்டமின் சி, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மாவு சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்கிறது.
பூசணிக்காய்:
Low Calorie Food For Weight Loss in Tamil: பூசணிக்காய் விதையில் இரும்பு சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் எ, விட்டமின் B, மினரல்ஸ், கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. பூசணிக்காயை நீங்கள் பொரியலாக செய்து அல்லது பூசணிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
சோளம்:
Low Calorie Food in Tamil: சோளத்தில் இருக்கும் விட்டமின் இ மற்றும் நார்ச்சத்து உடலில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சோளம் ஒரு சிறந்த உணவு. இதை நீங்கள் அவித்து அல்லது Popcorn-ஆக சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி:
Low Calorie Food List in Tamil: ஸ்ட்ராபெர்ரி இதில் அதிக அளவு வைட்டமின் எ, வைட்டமின் k, Iodine, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் தேவையில்லாமல் கொழுப்புகள் சேர்வதை தடுக்கும் திறன் உள்ளது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், இரத்த உற்பத்தி அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
ஆப்பிள்:
Low Calorie Food For Weight Loss in Tamil: உடலில் எந்த வித தொற்றும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும் சக்தி ஆப்பிளுக்கு உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்க உதவுகிறது.
முட்டை:
Low Calorie Food in Tamil: முட்டையில் புரோட்டீன்கள் அதிகளவில் உள்ளது. முட்டையின் வெள்ளை கருவில் 20% கலோரியும், மஞ்சள் கருவில் 60% கலோரியும் உள்ளது. உடல் எடை குறைய நினைப்பவர்கள் மஞ்சள் கருவை உணவில் சேர்த்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
வெள்ளரிக்காய்:
Low Calorie Food For Weight Loss in Tamil: நீர்ச்சத்து தேகத்தில் அதிகரிப்பதற்கு வெள்ளரிக்காய் சிறந்த உணவு. வெள்ளரிக்காயில் 18% கலோரி உள்ளது. வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். செரிமானத்திற்கும் உதவுகிறது.
தக்காளி – கலோரி குறைவான உணவுகள்:
Low Calorie Food List in Tamil: தக்காளியில் கலோரி 0% அளவு உள்ளதால் உணவில் தக்காளியை சேர்த்து கொள்ளலாம். உடலில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கும், கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் தக்காளி பெரிதும் உதவுகிறது.
கேழ்வரகு கூழ்:
- Low Calorie Food For Weight Loss in Tamil: காலையில் கேழ்வரகு கூழ் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகளை சரி செய்யலாம்.
- ராகி கூழ், உடல் கொழுப்பை கரைத்து, உடல் எடையையும் குறைக்க உதவும்.
நூறு கிராம் உணவுகளில் உள்ள கலோரிகளின் அளவு:
கலோரி உணவு அட்டவணை | |
அரிசி | 345 கலோரி |
கோதுமை | 344 கலோரி |
வெண்ணெய் | 755 கலோரி |
நெய் | 900 கலோரி |
சமையல் எண்ணெய் | 900 கலோரி |
கோழி இறைச்சி | 173 கலோரி |
ஆட்டு இறைச்சி | 194 கலோரி |
ஈரல் | 104 கலோரி |
மீன் | 130 கலோரி |
உப்புமா | 130 கலோரி |
சப்பாத்தி | 200 கலோரி |
தேன் | 320 கலோரி |
தயிர் | 60 கலோரி |
கலோரி அட்டவணை தமிழில் – Low Calorie Food Chart in Tamil:
கலோரி அட்டவணை தமிழில் – Food Calories List in Tamil | |
சமோசா | 250 கலோரி |
கிச்சடி | 160 கலோரி |
இட்லி | 132 கலோரி |
தோசை | 360 கலோரி |
பொங்கல் | 356 கலோரி |
ஊத்தாப்பம் | 330 கலோரி |
பூரி கிழங்கு | 460 கலோரி |
ஆப்பம் | 226 கலோரி |
உருளைக்கிழங்கு சிப்ஸ் | 565 கலோரி |
சாக்லேட் | 520 கலோரி |
மைசூர் பாக் | 720 கலோரி |
ரசகுல்லா | 333 கலோரி |
பாதம் அல்வா | 560 கலோரி |
சர்க்கரை | 320 கலோரி |
பழங்கள் – கலோரி உணவு அட்டவணை:
Calorie Food Chart in Tamil – Low Calorie Fruits in Tamil | |
ஆப்பிள் | 50 முதல் 65 கலோரி |
திராட்சை | 30 முதல் 35 கலோரி |
மாம்பழம் | 80 முதல் 120 கலோரி |
பப்பாளி | 35 கலோரி |
கொய்யா | 60 கலோரி |
ஆரஞ்சு | 60 கலோரி |
வாழைப்பழம் | 120 கலோரி |
காய்கறிகள் – கலோரி அட்டவணை:
Calorie Food Chart in Tamil | |
சிறுகீரை | 35 கலோரி |
வாழைத்தண்டு | 51 கலோரி |
வெங்காயம் | 59 கலோரி |
கத்திரிக்காய் | 24 கலோரி |
முருங்கைக்காய் | 26 கலோரி |
புடலங்காய் | 18 கலோரி |
எலுமிச்சை | 57 கலோரி |
முட்டைகோஸ் | 27 கலோரி |
காலிபிளவர் | 30 கலோரி |
மாங்காய் | 50 கலோரி |
கேரட் | 50 கலோரி |
கிழங்கு வகைகள் | 50 கலோரி |
உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் |
10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ் |
இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Heath Tips In Tamil |