லோ சுகர் அறிகுறிகள் | Low Sugar Symptoms in Tamil

Low Sugar Symptoms in Tamil

லோ சுகர் அறிகுறி | Symptoms Of Low Sugar in Tamil

Low Sugar Symptoms in Tamil: ஓடும் மனித உடல் இரத்தத்தில் உப்பு மற்றும் சர்க்கரை இரண்டும் கலந்துள்ளது. நம்முடைய உடல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிப்பதால் சர்க்கரை அல்லது நீரழிவு நோய் உண்டாகிறது. இந்த நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் 70 மில்லி கிராம் அளவிற்கு கீழாக ரத்த சர்க்கரையின் அளவு குறைந்திருந்தால், அது குறைந்தளவு சர்க்கரை நோயாக (லோ சுகராக) கருதப்படுகிறது. நம் உடலில் சரியான சர்க்கரை அளவானது உணவிற்கு முன் அதாவது வெறும் வயிற்றில் 80 முதல் 100 மி.கி./டெ.லி. வரை இருக்க வேண்டும். அடுத்து உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு 111 முதல் 140 மி.கி./டெ.லி வரை இருக்க வேண்டும். சர்க்கரை அளவானது அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. சர்க்கரையின் அளவானது குறைந்திருந்தால் நமது உடலில் உண்டாகும் அறிகுறிகள் சிலவற்றை படித்தறியலாம்.

லோ சுகர் அறிகுறி – மனக்குழப்பம் அதிகமாக உண்டாகும்:

 Low Sugar Symptoms in Tamil

லோ சுகர் இருப்பவர்களுக்கு மனதானது எப்போதும் குழப்பம் அடைந்த நிலையிலே உள்ளது போன்று இருக்கும். இதனால் சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனையும் உண்டாகும்.

லோ சுகர் அறிகுறி – அதிகமாக பசி எடுக்கும்:

 Low Sugar Symptoms in Tamil

இரத்ததில் சர்க்கரையின் அளவானது குறைந்து காணப்படும்போது அதிகமாக பசி ஏற்படும்.

லோ சுகர் அறிகுறி – வயிற்று சம்பந்த பிரச்சனை:

 Low Sugar Symptoms in Tamil

உடலில் இரத்ததில் சர்க்கரை அளவு குறையும் போது சிலருக்கு வயிறு பிரட்டல் போன்ற பிரச்சனைகள் உண்டாகக்கூடும். மேலும் வாந்தி போன்றவையும் எடுப்பதற்கு நேரிடும்.

லோ சுகர் அறிகுறி – செயலில் கவனமின்மை:

 Low Sugar Symptoms in Tamil

உடலில் லோ சுகர் இருப்பவர்கள் தாங்கள் எந்த வேலை செய்த்தாலும் அதில்கவனம் இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பேசும் போது குளறுபடிகள் உண்டாகும்.

லோ சுகர் அறிகுறி – தலைச்சுற்றல்:

Low Sugar Symptoms in Tamilஉடல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது குறைந்து காணப்படும்போது தலைசுற்றலானது ஏற்படும். சிலருக்கு தலைவலி கூட உண்டாகலாம். கீழே மயங்கி விழும் சூழலும் உண்டாகும்.

லோ சுகர் அறிகுறி – வியர்வை அதிகம் வெளியேறுதல்:

Low Sugar Symptoms in Tamil

உடலில் குறைந்த அளவிற்கு சர்க்கரை உள்ளவர்களுக்கு, உடலில் வெப்ப நிலை இல்லாத நேரத்திலும் அதிகமாக வியர்வை வெளியேறி கொண்டே இருக்கும். இதன் காரணமாக உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு பாதிப்பு அதிகமாகலாம்.

லோ சுகர் அறிகுறி – கை கால் / உடல் நடுக்கம்: 

 Low Sugar Symptoms in Tamil

உடலானது சீரான நிலையில் இயங்குவதற்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது சரியான அளவிற்கு இருக்க வேண்டும். சர்க்கரை அளவு குறைந்திருந்தால் பலருக்கும் கை,கால் மற்றும் உடல் நடுக்கம் ஏற்படும்.

லோ சுகர் அறிகுறி – உதடு மற்றும் நாக்கு:

 Low Sugar Symptoms in Tamil

இரத்த சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும் போது உதடு மற்றும் நாக்கு பகுதிகளானது வறண்டு போய்விடும். அப்போது அந்தப் பகுதியில் எந்த ஒரு சுயநினைவும் இல்லாதது போல் இருக்கும்.

லோ சுகர் அறிகுறி – உடல் சோர்வு:

 Low Sugar Symptoms in Tamilகுறைந்த சர்க்கரை நோயினால் அவதிப்பட்டவர்கள் மிகவும் உடலில் சோர்வு தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களால் அதிக நேரம் எந்த ஒரு வேலையினையும் செய்ய முடியாது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil