நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..!

lungs healthy vegetables in tamil

Lungs Healthy Food

இன்றைய ஆரோக்கியம் பதிவில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். மனிதனாக பிறந்த அனைவருமே அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சாத்தான காய்கறிகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இன்றைய அவசர உலகில் பலரும் சாப்பிட கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நம் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் நாம் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். வாங்க நண்பர்களே நுரையீரலை பாதுகாக்கும் காய்கறிகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

நுரையீரல் சளி நீங்க ஒரு சூப்பர் மருந்து..!

நுரையீரலை பாதுகாக்கும் காய்கறிகள்: 

பீட்ரூட்: 

பீட்ரூட்

பீட்ரூட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புரதச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டு போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.

இதில் நைட்ரேட்கள் அதிகம் இருப்பதால் இது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் நைட்ரேட்கள் இரத்த நாளங்களை தளர்க்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் அதேபோல ஆக்சிஜன் உறிஞ்சிதலை மேம்படுத்தி நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது.

இஞ்சி: 

இஞ்சி

இதில் வைட்டமின் A, C, B 6, B 12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இஞ்சி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இஞ்சியில் உள்ள ஆன்டி இன்ஃப்ளமேட்டரி என்ற பண்புகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது நுரையீரலில் தங்கியிருக்கும் நெஞ்சு சளியைக் கரைத்து வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இது நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக ஆடாதோடை!!!

 

பூசணிக்காய்: 

பூசணிக்காய்

பூசணிக்காயில் பீட்டா கரோட்டின், லூடின் மற்றும் கரோட்டினாய்டு ஜியாக்சாண்டின் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இந்த பூசணிக்காயில் இருக்கும் சதை பகுதி நுரையீரல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அதனால் இது நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்க உதுவுகிறது.

பூண்டு: 

பூண்டு

இதில் வைட்டமின் சி, இரும்புச் சத்து மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதில் இருக்கும் அல்லிசின் என்னும் பண்புகள் மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. மேலும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினை வராமல் தடுக்கிறது. பூண்டில் இருக்கும் சத்துக்கள் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடுகிறது.

தக்காளி: 

தக்காளி

தக்காளியில் வைட்டமின் A, B, C, B 12, நார்ச்சத்து, நியாசின், இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் இருக்கிறது.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி மற்றும் தக்காளி சேர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் சுவாசப் பாதையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil