மகிழம் பூ நன்மைகள்
இன்றைய பதிவில் மகிழம் பூ நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். மகிழம் பூ அதிக நறுமணத்தை கொண்டுள்ளது. இது அதன் நறுமணம் மட்டும் இல்லாமல் பல மருத்துவ தன்மையை கொண்டுள்ளது. இந்த வகை பூ அதிகமாக சிவன் கோவில்கள், பூங்கா போன்ற இடங்களில் வளர்க்கப்படுகின்றனர். இதன் பூ, காய் , வேர் ,பட்டை மற்றும் விதை இவை அனைத்தும் மருத்துவகுணம் கொண்டுள்ளது. மகிழம்பூ ஆங்கிலத்தில் மிமிசோப்ஸ் இலாங்கி என்ற மற்றோரு பெயரும் உண்டு. இந்த பூவில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. மகிழம் பூ தலைவலி , உடல் உஷ்ணம், கழுத்து மற்றும் தோல்பட்டை வலியை, பசியின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை சரிசெய்வதற்கும் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இப்போது நாம் மகிழம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
பல்வலி:

மகிழம் மரத்தின் இருக்கும் இரண்டு பிஞ்சு காய்களை எடுத்து வாயில் போட்டு மென்று துப்பிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பிளித்து வந்தால், பல் ஆடுவது,பல் வலி மற்றும் பல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும். இதனை 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை செய்து வருவதன் மூலம் பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும்.
தலைபாரம்:
மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து வெந்நீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் தலைவலி மற்றும் தலைபாரம் போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும், இந்த பூவின் பொடியை பாலில் கலந்து குடித்து வருவதன் மூலம் காய்ச்சல் மற்றும் உடல்வலி குணமாகும்.
பொடுகு:

மகிழம் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தலைக்கு தடவி வந்தால் தலையில் இருக்கும் பேன், பொடுகு பிரச்சனை குணமாகும்.இதுமட்டும் இல்லாமல் காலில் பித்தவெடிப்பு மற்றும் தோல் சம்மந்தபட்ட பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது .
வாய்ப்புண்:
மகிழம் பூவின் பட்டையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வருவதன் மூலம். வாய்ப்புண் குணமடையும். மேலும் , மகிழம் பட்டையை அரைத்து பொடி செய்து ஆறாத புண் அல்லது கட்டிகள் மீது தடவி வந்தால் புண் சரியாகும்.
கருப்பை பலப்படுத்த:

மகிழம் பூவின் பட்டையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் காலை மற்றும் மாலை குடித்து வருவதன் மூலம் பெண்களுக்கு கருப்பை பலப்படும். இது கருத்தரிக்க செய்வதோடு கருவையும் பாதுகாத்து குழந்தை பிறப்பையும் சுகமாக்க செய்கிறது.
மலச்சிக்கல்:
மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள். மலம் கழிக்க கஷ்டப்படுபவர்கள் மகிழம் விதையை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து சுத்தம் செய்து வாரம் ஒருமுறை 10 கிராம் இந்த பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனை குணமாகும்.
தும்பை பூவின் மருத்துவ பயன்கள்
மூட்டுவலி :

மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் இருப்பவர்கள் மகிழம் மரத்தின் வேரை வினிகரில் கலந்து தடவி வந்தால் மூட்டுவலி வீக்கம் விரைவில் குணமாகும். அல்லது மூட்டுவலிக்கு மகிழம் மரத்தின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மூட்டுவலி குணமாகும்.
உடல் உஷ்ணம்:
உடலில் வெப்பம் அதிகமாக இருபவர்கள் மகிழம் பூவை நீரில் காய்ச்சி குடித்துவந்தால் உடல் உஷ்ணம் குறையும் அல்லது மகிழம் பூ பொடியை குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் உடல் உஷ்ணம் குறைவது மட்டுமின்றி உடலில் நறுமணம் வீசக் கூடும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |














