Are There So Many Benefits Of Eating Spinach In Tamil
பொதுவாக கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்றுதான். ஒவ்வொரு கீரைகளும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன. அதில் நம் உடலுக்கு பயன்கள் கிடைப்பது ஏராளம். அதனால் நாம் கீரை வகைகளை வாரத்தில் ஒருமுறையாவது உணவில் எடுத்து கொள்ள வேண்டும். சரி இந்த பதிவில் மணத்தக்காளி கீரையின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ரோட்டோரங்களில் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த மணத்தக்காளி கீரை உடலுக்கு தரும் பயன்களை கீழே படித்து அறிந்து கொள்ளலாம்.
மணத்தக்காளி கீரை:
மணத்தக்காளி கீரை ஒரு நோய் எதிர்ப்பு சத்தியை தர கூடிய கீரை இந்த கீரையில் காணப்படும் பழங்கள் அதுவும் வயிற்று புண்களை ஆற்ற கூடிய ஒன்றாகும். அதனால் இந்த மணத்தக்காளி பழங்களை மோரில் ஊறவைத்து அதனை காயவைத்து மோர்வத்தலாகவும் உணவில் சேர்த்து சாப்பிடுவாராகள். மணத்தக்காளி பழங்கள் வயிற்றில் இருக்கும் பூச்சிகளையும் நீக்கும் தன்மை உடையது.
செரிமான பிரச்சனை :
செரிமான கோளாறு இருப்பவர்களும் இந்த மணத்தக்காளி கீரையை சாப்பிடலாம். குடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளையும் இந்த மணத்தக்காளி கீரை சாப்பிடுவதன் மூலம் நாளடைவில் அது குணமாகிவிடும்.
மாதவிடாய் வலி குணமாக :
சத்து குறைபாட்டால் சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி உண்டாகும். அப்படியுள்ளவர்கள் இந்த மணத்தக்காளி கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வவலிகள் குணமாகிவிடும்.
உடல் சூடு :
உடல் சூடு இருப்பவர்களுக்கு நிறைய உடல் உபாதைகள் உருவாகும். இவர்களுக்கு வயிற்றுவலி, மலச்சிக்கல் மற்றும் மஞ்சள் காமாலை வருவதற்கும் வாய்ப்புண்டு. அதனால் உடல்சூடு உள்ளவர்கள் குளிர்ச்சித்தன்மை உடைய உடல் சூட்டை தணிக்கும் கீரை வகையான மணத்தக்காளி கீரையை சாப்பிடலாம்.
சரும பிரச்சணை தீர :
மணத்தக்காளி கீரை சரும பிரச்சனைகளை தீர்க்க கூடியவை. மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் முகம் பளபளப்பாக இருக்கும். சருமத்தில் ஏதேனும் அலர்ஜி இருந்தால் அது சீக்கிரத்தில் குணமடைய செய்யும்.
வயிற்று புண் :
மணத்தக்காளி கீரை வயிற்று புண்களை ஆற்ற கூடியவை அதனால் மணத்தக்காளி கீரையை வயிற்று புண் மற்றும் குடல் புண் இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையை முக்கியமாக சாப்பிட வேண்டும்.
எல்லாருக்கும் பிடிக்கும் மணத்தக்காளி கீரை பொரியல்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |