மாங்காயில் உப்பு மிளகாய் சேர்த்து சாப்பிடலாமா.!
இந்த கோடை காலத்தில் ரோட்டோரத்தில் தள்ளுவண்டி கடையில் மாங்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவை விற்பார்கள். இதை பார்த்து விட்டு அப்படியே வருவோமா.! அது எப்படி மாங்காவை வாங்கி அதில் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து சாப்பிட்டாலே அதனுடைய ருசி சும்மா அள்ளும். சொல்லும் போதே வாயில் உமிழ் நீர் சுரக்கும். அதனால் இந்த பதிவில் மாங்காயில் உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து சாப்பிடுவதால் நல்லதா.! கெட்டதா.! என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
Benefits of Eating Raw Mango With Salt and Chilli in Tamil:
மாங்காய் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்..! அப்போ அதன் தீமைகளை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி..?
சர்க்கரையின் அளவை குறைக்கிறது:
மற்ற பழங்களோடு மாங்காவை ஒப்படியும் போது இதில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் பச்சை மாங்காவை சாப்பிடலாம். மேலும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.
இதயத்திற்கு நல்லது:
பச்சை மாங்காவில் வைட்டமின் பி, நியாசின் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.செரிமான பிரச்சனை:
மாங்காயில் செரிமானத்திற்கு தேவையான அமில ஆசிட் என்று சொல்லக்கூடிய செரிமான என்சைம் இருப்பதால் செரிமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
உணவில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா
கல்லீரலுக்கு நல்லது:
உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றி கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கல்லீரல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
பல் பிரச்சனைகளை சரி செய்ய:
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது. ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சருமத்திற்கும், முடிக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
செய்யும் போதே நாக்கில் எச்சில் ஊரும் மாங்காய் பச்சடி.. ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Health Tips In Tamil |