தினமும் பால் குடிப்பவர்களுக்கு முக்கியமான தகவல்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!

மஞ்சள் பால் எப்போது குடிக்க வேண்டும்

யாரென்றாலும் தினமும் பால் குடிப்பவர்கள் அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். அதேபோல் பால் குடிக்காதவர்களுக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். காரணம் வெறும் பால் குடிப்பதே நன்மை என்றால் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பால் குடிப்பதால் எவ்வளவு நன்மை இருக்கிறது என்று தெரியுமா..? இனி அனைவருமே மஞ்சள் தூள் போட்டு பால் குடித்தால் நல்லதாக இருக்கும். அது எந்த அளவிற்கு நன்மையை அளிக்கிறது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

மஞ்சள் பால் நன்மைகள்:

மஞ்சள் பால் நன்மைகள்

மஞ்சள் பால் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உள்ளது. அதேபோல் சளி, இருமல், காய்ச்சல், காயங்கள், மூட்டு வலி மற்றும் பல சிக்கல்களுக்கு மஞ்சள் கலந்த பால் எடுத்து கொள்வது சிறந்த வழி உள்ளது வாங்க அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம்..!

குர்குமின் பயன்கள்:

மஞ்சள் தூளில்குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை காணப்படுவதால் மிகவும் நல்ல மருந்து பொருளாக உள்ளது. இதுபோன்ற மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள் தூள் பாலை தினமும் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த என பல வகையிலும் உதவுகிறது.

எவ்வளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்:

எவ்வளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்

மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் என்ற பொருள் நமது உடலின் கொழுப்பு மற்றும் திசுக்களில் உறிஞ்சப்படுவதால் நமது உடலுக்கு பலவகையான நன்மையை அளிக்கிறது. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது.

இதன் மூலம் குர்குமின் சிறப்பாகவும் வேகமாகவும் கொழுப்புகள் மற்றும் திசுக்களால் எளிதாக உறிஞ்சப்படுகிறது.  ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தால் போதுமானது. 

புற்றுநோய் வராமல் தடுக்க:

புற்றுநோய் வராமல் தடுக்க

மஞ்சள் தூளில் ஏராளமான நன்மைகள் உள்ளது அதில் ஒன்று புற்று நோய் வராமல் தடுக்க முடியும்,அதனை வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. மேலும் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்குமாம்.!

சளி இருமல் குணமாக வழிகள்:

சளி இருமல் குணமாக வழிகள்

மழை காலம் என்றாலும் சரி வெயில் காலம் என்றாலும் சரி சளி இருமல் தொல்லை இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு தினமும் பால் குடிக்கும் போது பாலில் 1/2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் அதிலிருந்து விடுபட முடியும்.

மேலும் இதில் காணப்படும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா உடலுக்கு சக்தியை அளித்து வலுமையை அதிகமாக்குகிறது.

எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்:

எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்

மஞ்சள் தூள் கலந்த பால் எடையை குறைக்க உதவும். அதிக எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் உடல் எடை குறைந்து விடும்.

முக சுருக்கம் நீங்க:

முக சுருக்கம் நீங்க

தினமும் மஞ்சள் துளை பாலில் கலந்து குடிப்பதால் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும். மஞ்சள் பாலில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால்  செல்களின் சேதத்தைத் தடுக்கிறது மற்றும் வயதாகும் போதும் முகம் பிரகாசமான இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்