மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்

Advertisement

 Health Benefits Of  Mappillai Samba Rice in Tamil

Mappillai Samba Rice Benefits in Tamil:வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் பற்றி பார்ப்போம். நம் முன்னோர்களின் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க அரிசிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். திருவண்ணாமலையில் இந்த நெல் வகை உற்பத்தியாகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசி நன்மைகள்: இதற்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வருவதற்கான காரணம் பழங்காலத்தில் பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு ஆண்கள் தங்கள் வலிமையை காண்பிப்பதற்காக இளவட்டக்கல் தூக்குவார்கள். அந்த கல்லை தூக்குவதற்கான வலிமையை தரும் அளவிற்கு இந்த அரிசியில் சத்து நிறைந்துள்ளதால் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வைத்துள்ளனர்.

இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்  – மாப்பிள்ளை சம்பா அரிசி நன்மைகள்:

mappilai samba arisiyin payangal

  • Mappillai Samba Rice Benefits in Tamil: இந்த அரிசியில் அதிகமான அளவு இரும்பு சத்து, புரத சத்து மற்றும் Zinc நிறைந்துள்ளது, இது ஹீமோகுளோபின் மற்றும் மயோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.
  • இதில் இருக்கும் அதிக அளவு நார்சத்து உணவை எளிதில் செரிமானம் அடைய செய்கிறது.
கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும்

mappilai samba rice benefits in tamil

  • மேலும் Glycemic Index அளவு குறைந்து காணப்படுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. Glycemic Index என்பது நம் உணவில் உள்ள கார்போஹைட்ரெட்  இரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வளவு அதிகப்படுதுகிறது என்பதை காட்டுவது.
பாரம்பரிய காட்டுயாணம் அரிசி பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் mappilai samba arisiyin payangal

  • இந்த அரிசி Antioxidant ஆகவும் செயல்படுகிறது, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி நோய்வாய்படுவதிலிருந்து விடுபடலாம்.
  • Colon cancer போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மற்றும் Fertility-யை Improve பண்ணுவதற்கும் இந்த அரிசி முக்கியமாக பயன்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
அரிசி வகைகளும் அதன் பயன்களும்

மாப்பிள்ளை சம்பா அரிசி சமையல்:

mappillai samba rice uses in tamil

  • இந்த அரிசியில் நாம் இட்லி, அடை, தோசை, புட்டு மற்றும் கார கொழுக்கட்டை செய்தும் சாப்பிடலாம்.
  • அரிசியை நன்றாக வேகவைத்து சாதமாக உண்ணலாம் இல்லையென்றால் இந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை பழைய சோராகவும் அல்லது நீராகாரமாகவும் எடுத்து கொள்ளலாம்.
  • மாப்பிள்ளை சம்பா அரிசி வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து மிதமான சூட்டில் குடித்து வந்தால் தீராத வயிற்று வலி மற்றும் அல்சரினால் உண்டாகும் வயிற்று புண்கள் விரைவில் குணமாகும்.

மாப்பிள்ளை சம்பா பற்றிய தகவல்:

மாப்பிளை சம்பா தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும். இந்த அரிசி, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் போன்றவை செய்யலாம். மாப்பிளை சம்பாவை விளைவிக்க 155 முதல் 160 நாட்கள் தேவைப்படும்.

கருங்குறுவை அரிசி பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement