மருதாணியின் தீமைகள் | Maruthani Side Effects in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மருதாணியின் தீமைகள் (Maruthani Side Effects in Tamil) பற்றி பின்வருமாறு பின்வருமாறு கொடுத்துள்ளோம். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் ஒன்று மருதாணி. மருதாணியை கையில் போட்டு கொண்டால் கை மிகவும் அழகாக இருக்கும் என்பதற்காக பெண்கள் இதனை அடிக்கடி போட்டு கொள்வார்கள். அதுமட்டுமின்றி, மருதாணியில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கிறது.
பெண்கள், விசேஷ நாட்களில் மருதாணி இலையை அரைத்து கையில் போட்டு கொள்வது வழக்கம். அதுமட்டுமில்லாமல், உடலில் சூடு அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி மருதாணி போட்டு கொண்டால் உடல் சூடு குறையும் என்று கூறுவார்கள். மருதாணியில் பல நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தீமைகள் இருக்கதான் செய்கிறது. அதனை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
Maruthani Side Effects in Tamil:
- மருதாணி குளிர்ச்சியான பொருள். சிலருக்கு மருதாணி போடுவதால் சளி, இருமல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, மருதாணியை குளிர்காலங்களில் போட்டு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருதாணி போடுவதை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருதாணி போட்டு கொண்டால் அதன் குளிர்ச்சி குழந்தைகளை பாதிக்கும். இதனால், குழந்தைங்களுக்கு சளி, இருமல, காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும்.
- பல பெண்கள், தலைமுடியின் வளர்ச்சிக்காக மருதாணியை அடிக்கடி தலை முடிக்கு தேய்த்து வருவார்கள். அனால் இது மிகவும் தவறான ஒன்று. மருதாணியை அடிக்கடி தலைமுடிக்கு தேய்ப்பதால் நரைமுடி அதிகமாக வாய்ப்புள்ளது.
- மேலும், மருதாணி பேஸ்டை தலையில் அதிக நேரம் வைத்து கொண்டால், அதன் குளிர்ச்சி தன்மை தலையில் இறங்கி, தலையில் நீர் கோர்த்தல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
- சிலருக்கு மருதாணி அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, அப்படி இருக்கும் நபர்கள் மருதாணியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- மாதவிடாய் காலம் தள்ளி போனால், பெண்கள் மருதாணியை அரைத்து கையிலும், பாதத்தின் அடிபகுதியிலும் போட்டு கொள்வார்கள். இவ்வாறு போட்டு கொண்டதால் மாதவிடாய் விரைவில் வந்து விடும் என்பதற்காக. ஆனால் மாதவிடாய் காலத்தில் மருதாணி போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், மருதாணியின் குளிர்ச்சி அதிக இரத்தப்போக்கினை ஏற்படுத்தும்.
மருதாணி போட்டால் ஒரு வாரம் உங்களை எமன் நெருங்க மாட்டாரா ..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |