மத்தி மீன் தீமைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..? | Mathi Meen Theemaigal in Tamil

Advertisement

Mathi Meen Theemaigal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக மத்தி மீன் தீமைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இவ்வுலகில் பலரும் அசைவ பிரியர்களாக இருக்கிறார்கள். அதிலும் அசைவத்தில் அனைவரும் விரும்பி சாப்பிட கூடியது மீன்கள் தான். அப்படி மீன் சாப்பிட பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. மீனில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மீனில் பல வகைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு மீனிலும் தனி தனி சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், மீனில் என்ன தான் அதிக சத்துக்கள் இருந்தாலும், நாம் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது அது பல தீமைகளை உண்டாக்குகிறது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

மத்தி மீன் பயன்கள்

மத்தி மீன் தீமைகள்: 

மத்தி மீன் தீமைகள்

பத்தாண்டுகளுக்கு முன்பு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற மத்தி மீன் இப்போது கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு மத்தி மீனுக்கு மவுஸ் அதிகமாகி உள்ளது. காரணம் இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த மத்தி மீனில்,

  • நீர் – 72.29 கிராம்
  • ஆற்றல் – 152 கிலோகலோரி
  • புரதம் – 17.91 கிராம்
  • கொழுப்புகள் – 8.99 கிராம்
  • கால்சியம் – 42.26 மி.கி
  • மெக்னீசியம் – 24.39 மி.கி
  • பாஸ்பரஸ்: 191 மி.கி
  • பொட்டாசியம்: 228 மி.கி
  • சோடியம்: 38.49 மி.கி

ஆனால் அதே அளவு தீமைகளும் மத்தி மீனில் இருக்கிறது. அதை பற்றி தற்போது காண்போம்.

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

ஒவ்வாமை பிரச்சனைகளை உண்டாக்கும்: 

மத்தி மீன் தீமைகள்

பொதுவாக முறையற்ற குளிரூட்டல் மத்தி மீனில் பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பாக்டீரியா புரதத்தை ஹிஸ்டமைனாக மாற்றுகிறது.

ஆகவே நாம் மத்தி மீன் அதிகளவு உட்கொள்ளும் போது அது நம் உடலில் ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்துகிறது.

ஆகவே மத்தி மீனை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள்,

  • உடலில் சிவத்தல்
  • அரிப்பு
  • படை நோய்
  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்றுப் பிடிப்பு
  • தலைசுற்றல்
  • படபடப்பு
  • தலைவலி

போன்ற ஒவ்வாமை விளைவுகளை உண்டாக்குகிறது. எனவே நீங்கள் மத்தி மீனை சாப்பிட்ட பிறகு மேற்கூறிய பக்க விளைவுகள் உங்களுக்கு இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

மத்தி மீன் சாப்பிடுவீர்களா.. அப்போ இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு..

பதப்படுத்தப்பட்ட மத்தி மீனை தவிர்க்கவும்: 

பொதுவாக சில இடங்களில் மீன்கள் ஐஸ் பெட்டியில் வைத்து தான் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி விற்பனை செய்யப்படும் மத்தி மீன்கள் வாங்குவதை தவிர்க்கவும்.

ஏனெனில், இப்படி பதப்பட்டுத்தப்பட்ட மத்தி மீன்கள் குறைந்த அமில உணவாகும். இது க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதாவது வெப்பத்தை தாங்கும் நுண்ணுயிரியை உருவாக்குகிறது. மற்றும் ஒரு நச்சுத்தன்மையை உருவாக்குகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட மத்தி மீன் அதிக ஆபத்து உள்ளவை. ஆகவே அதுபோன்ற மத்தி மீன் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement