மாதுளம் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..!

Advertisement

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் | Mathulai Palam Benefits in Tamil

பொதுவாக நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பது பழங்களில் தான். அதிலும் மாதுளம் பழத்தில் அதிகமாகவே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய மாதுளையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இது புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு போன்ற மூன்று ரகங்களில் வளர்க்கப்படுகிறது. இவற்றின் ஆங்கில பெயர் Punica Granatum ஆகும். மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாதுளை செடியில் காய்கள் அதிகம் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!

 

உடல் எடை அதிகரிக்க:

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து மாதுளை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும்.

இதயம் பலம் பெற:

இனிப்பு மாதுளை சாப்பிட்டு வந்தால் மூளையும் இதயமும் சக்தி பெரும். அதுமட்டுமில்லாமல் பித்தம், இருமல் போன்றவற்றை போக்கும். புளிப்பு மாதுளை சாப்பிட்டால் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றும் மற்றும் வயிற்று கடுப்பும் நீங்கும்.

ஆரோக்கியமான சருமத்திற்கு:

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்

சருமத்தை பராமரிக்கக்கூடியதில் மிகவும் முக்கியமானது வைட்டமின் ஈ. இது மாதுளம் பழத்தில் அதிகமாகவே இருக்கிறது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உலர் சருமத்தை கொண்டுள்ள பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

இவற்றின் தோலை காயவைத்து பொ டி செய்து பாசிப்பயிறு மாவு சேர்த்து குளித்தாலோ அல்லது முகத்தில் பூசி கொண்டாலோ உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

கருவுற்ற பெண்களுக்கு ஏற்றது:

மாதுளம் பழத்தின் நன்மைகள்

மாதுளம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இரும்புசத்து மற்றும் நார்சத்து போன்றவை இருக்கிறது. இது கருவுற்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது கருவுற்ற பெண்களின் உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கர்ப்பகாலத்தில் மாதுளை சாறு குடிப்பதால் தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

இது கருவுற்ற பெண்களின் உடல் சூட்டினை குறைத்து கருப்பையை வலுவூட்டி இரத்த விருத்தியை அதிகரித்து ஆரோக்கியமாக வைக்கிறது.

தூக்கி எறியும் மாதுளை தோலில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா.!

 

மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல் பிரச்சனைகள் உள்ளவர்கள் 3 நாட்கள் தொடர்ந்து மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

மாதவிடாய் பிரச்சனை நீங்க:

pomegranate benefits for women in tamil

மாதுளப் பழச்சாற்றை 1 மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோமின் அளவை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

தலைமுடி வளர:

pomegranate fruit health benefits in tamil

மாதுளை, தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடிவளர்ச்சியை அதிகரிக்கிறது. இதில் உள்ள தனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளர செய்கிறது.

ஆண்மையை அதிகரிக்கும்:

மாதுளம் பழ விதைகளை பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து நஷ்டம் வேகக்கடுப்பு குணமாகி ஆண் தன்மையை ஏற்படுத்தும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 

 

 

Advertisement