மீல் மேக்கர் பயன்கள் | Meal Maker Benefits in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் சில உணவு பொருட்கள் எதில் தயாரிக்கிறார்கள் என்று தெரியாமல் கூட நாம் இப்பொழுது அவற்றை சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று தான் மீல் மேக்கர். இந்த மீல் மேக்கர் எதுல தயாரிக்கிறாங்க அப்படினு யாருக்குமே அதிகமாக தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இந்த மீல் மேக்கர் சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சரி இந்த மீல் மேக்கர் எதிலிருந்து கிடைக்கிறது, இவற்றை நாம் சாப்பிடலாமா?, இவற்றில் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?, இவற்றை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இது போன்ற தகவல்களை நாம் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
மீல் மேக்கர் எப்படி தயாரிக்க படுகிறது?
பொதுவாக சோயா பீன்ஸில் இருந்து பல வகையான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதாவது சோயா பால், சோயா சாஸ், சோயா எண்ணெய் ஆகிய உணவு பொருட்கள் கிடைக்கிறது. அதில் குறிப்பாக சோயா பீன்ஸில் இருந்து எண்ணெய் தயாரித்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் கழிவு தான் இந்த மீல் மேக்கர் ஆகும்.
இது வெறும் சக்கை என்று தவறாக எண்ணிவிடாதீர்கள் இந்த மீல் மேக்கரில் புரதச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. சைவ பிரியர்கள் அசைவ உணவுகளை உண்பதில்லை, இருப்பினும் அசைவ உணவின் சுவை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பிக்கிறீர்கள் என்றால் இந்த மீல் மேக்கரை சமைத்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவை அருமையாக இருக்கும்.
பொதுவாக புரதத்தில் நம் உடலுக்கு தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கும். இருந்தாலும் இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கி கொள்ளாது. இத்தகைய சத்தை கடல் உணவான மீன்களில் அதிகளவு காணப்படும் அமினோ அமிலமான ஒமேகா 3 அமிலமானது சைவ உணவான இந்த மீல் மேக்கரில் உள்ளது. நென்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த மீல் மேக்கரை சாப்பிடலாம். இறைச்சி உணவில் கிடைக்கும் அத்துணை சத்துக்களும் இவற்றில் இருந்து நீங்கள் பெற முடியும். குறிப்பக அசைவ உணவில் இருக்கும் கொழுப்புகளை விட இந்த மீல் மேக்கரில் சத்து மிக குறைவாக தான் உள்ளது.
1980 களில் திருமண நிகழ்ச்சிகளில் போடப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் இந்த மீல் மேக்கர் கலக்கப்பட்டது. இதனுடைய சுவை பிடித்துப்போக அனைவரும் அதனை விரும்பி வாங்க ஆரம்பித்தனர்.
இதையும் கிளிக் செய்யுங்கள் –>மீல் மேக்கர் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!
மீல் மேக்கர் பயன்கள் – Meal Maker Benefits in Tamil:
சோயாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த மீல் மேக்கரை நீங்கள் உட்கொள்வதன் மூலம் இதயத்திற்கு தேவையான சக்தியை அதிகரிக்க முடியும்.
இவற்றை எடுத்து கொள்வதினால் இதயத்தில் இரத்தக் குழாய்களின் இலகு தன்மை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த குழாய்களுக்கு அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் வற்றில் இயற்கையாகவே உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், வவைட்டமின் ஏ போன்றவை கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.
மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
மீல் மேக்கரை ஆண்கள் அதிகம் சாப்பிட கூடாது! ஏன் தெரியுமா?
மீல் மேக்கரை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்கள் இதனை சாப்பிடும் போது அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த மீல் மேக்கரை அளவோடு உட்கொள்வது அனைவருக்கும் நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |