Meal Maker Side Effects
அனைவருக்கும் இன்றைய ஆரோக்கியம் பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே புதியதாக மாறிவிட்டது. அதாவது நாம் அனைவருமே துரித உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அதுபோல நாம் விரும்பி சாப்பிடும் சைவ பிரியாணி போன்றவற்றில் சேர்த்து சமைக்கும் பொருள் தான் மீல் மேக்கர். இந்த மீல் மேக்கர் சைவ பிரியாணி, மீல் மேக்கர் குருமா, மீல் மேக்கர் வறுவல் போன்று பலவிதமாக சமைக்கப்படுகிறது. இந்த மீல் மேக்கரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் மீல் மேக்கரில் இருக்கும் தீமைகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மீல் மேக்கரை ஆண்கள் அதிகம் சாப்பிட கூடாது! ஏன் தெரியுமா? |
மீல் மேக்கர் எதில் இருந்து கிடைக்கிறது:
மீல் மேக்கர் சோயா பீன்ஸ் என்ற பருப்பு வகையில் இருந்து கிடைக்கிறது. அது எப்படி என்று கேட்பீர்கள். உதாரணத்திற்கு நிலக்கடலையில் இருந்து எப்படி எண்ணெய் தனியாக புண்ணாக்கு தனியாக பிரித்து எடுக்கிறோமோ, அதே முறையில் தான் மீல் மேக்கரும் தயாரிக்கப்படுகிறது. இதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.
சோயாவின் சக்கை தான் மீல் மேக்கராக தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மீல் மேக்கர் என்பது ஒரு கம்பெனியின் பெயர். அவர்கள் இதனைத் தயாரித்து விற்றதால் தான் இதற்கு மீல் மேக்கர் என்று பெயர் வந்தது.
இது இறைச்சிக்கு சமமானதாக இருப்பதால் தான் இதை சைவ பிரியாணி போன்றவற்றில் சேர்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் மீல் மேக்கர் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு விந்தணு சுரப்பில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்று இப்போது பார்ப்போம்.
இதையும் கிளிக் செய்யுங்கள் –> எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது?
மீல் மேக்கர் தீமைகள்:
- மீல் மேக்கரை குழந்தைகள் அதிகளவு சாப்பிட்டால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடலில் பல ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது. அதனால் குழந்தைகளுக்கு மீல் மேக்கர் அதிகமாக கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்த கூடும்.
- மீல் மேக்கர் அதிகமாக சாப்பிடுவது புற்றுநோய் செல்கள் அதிகளவு உற்பத்தியாக வழி செய்கிறது.
- மீல் மேக்கர் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்துகிறது.
- இது தொண்டையில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- மீல் மேக்கர் கனிம குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- மீல் மேக்கரை அதிகமாக எடுத்து கொள்ளும் போது புரத செரிமானத்தைத் தடுக்கிறது.
- சோயாவில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் என்ற வேதிப்பொருள் உள்ளது. அது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது. இதை அதிகளவு உட்கொள்ளும் போது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மீல் மேக்கர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எவ்வளவு மீல் மேக்கர் எடுத்து கொள்ளலாம்:
நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டுமே அடங்கியுள்ளது. அதனால் எந்த உணவும் ருசியாக இருக்கிறது என்பதற்கான அதனை அடிக்கடியும், அதிகமாகவும் எடுத்து கொள்ள கூடாது. அளவோடு எடுத்து கொள்வது சிறந்தது.
ஒரு நாளைக்கு 25 கிராம் முதல் 30 கிராம் வரை மீல் மேக்கரை எடுத்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் மீல் மேக்கரை எடுத்து கொள்வதற்க்கு முன்பு மருதுவை ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.
மீல் மேக்கரில் என்னென்ன செய்யலாம்:
இந்த மீல் மேக்கரை சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுகிறர்கள். அதுமட்டுமில்லாமல் அசைவ பிரியர்கள் அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோணும் போதும் கூட மீல் மேக்கரை செய்து சாப்பிடுகிறர்கள். இதில் சூப் வறுவல், கிரேவி, சாண்ட்விச் போன்றவை செய்து சாப்பிடலாம்.
மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |