Medicine Benefits Of Betel Leaves In Summer Season In Tamil
வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும். தோல் அலர்ஜி, எரிச்சல் உடல் சூடு போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வோம். தர்ப்பூசணி ஜூஸ், இளநீர், மோர் போன்ற தண்ணீர் உணவுகளை எடுத்துக்கொள்வோம். இது நம் உடலில் உள்ள சூடுகளை தணிக்கிறது. இதை தவிர நாம் எடுத்துள்கொள்ளும் பழங்களும் காய்கறிகளும் கூட நம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
வெயில் காலத்தில் மட்டுமே நம் உடலில் தேவையில்லாத சில பிரச்சனைகள் ஏற்படும். உதாரணத்திற்கு உடல் அலர்ஜி, சரும பிரச்சனை, உடலில் காயங்கள் என சில பிரச்சனைகள் ஏற்பட்டால் இதற்கு தீர்வாக நாம் வெற்றிலையை பயன்படுத்தலாம். பொதுவாகவே வெற்றிலை குளிர்ந்த தன்மை உடையது. எனவே நாள் உடல் அல்ர்ஜி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வெற்றிலையை எப்படி பயன்படுத்துவது என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
வெற்றிலை பயன்கள்:
நம் உடல் சூட்டை தணிக்க வெற்றிலை பயன்பாடு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஏனெனில் இதில் இயற்கையாகவே குளிர்ச்சியை கொடுக்கும் பண்புகள் அதிகமாகவே இருக்கிறது. நாம் எந்த ஒரு விஷேசத்திற்கு சென்றாலும் அங்கு தேங்காய் பையுடன் வெற்றிலை கொடுப்பது தமிழர்களின் வழக்கமாகும். அதேபோல் சாப்பிட்டு முடித்துவிட்டு வெற்றிலை போடுவதும் தமிழர்களின் வழக்கமாகும். ஆகவே வெற்றிலை நம் பாரம்பரியத்தில் ஒன்றாகவே இருந்து வருகிறது.
தீக்காயங்களை குணப்படுத்தும்:
வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் அப்ளை செய்து வந்தால் காயமும் எரிச்சலும் விரைவில் குணமடையும். தீக்காயங்கள் ஏற்பட்டால் வெற்றிலையை பயன்படுத்துவது சிறந்தது.
பொடுகு பிரச்சனை நீங்கும்:
தற்போது பொடுகு பல்வேறு நபர்களுக்கு இருக்க கூடிய ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பொடுகு நீங்குவதற்கு இயற்கை வைத்தியமாக வெற்றிலை இருக்கிறது. வெற்றிலையுடன் துளசி இலைகள் மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலையில் அப்ளை செய்து சிறிது நேரம் தலைக்கு குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
முடி உதிர்வதை தடுக்கும்:
முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று நம் அனைவருமே விருப்புவோம். முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று பல்வேறு இயற்கை வைத்தியங்களை செய்து வருவோம். ஆனால் இதுவே முடி உதிர்ந்தால் அதுவே நமக்கு பெரிய மன கவலையாக இருக்கும். முடி உதிராமல் தடுப்பதற்கு வெற்றிலை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
முதலில் வெற்றிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் நல்லெண்ணையை சேர்த்து கலந்து தலைமுடி முழுவதும் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.
பல் சொத்தையை குணப்படுத்தும்:
வெற்றிலையை சுத்தமாக கழுவி விட்டு அதனை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட வேண்டும். தினமும் ஒரு வெற்றிலையை என தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் பல் சொத்தை, பல் ஈறு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
வாய் துர்நாற்றத்தை நீக்கும்:
வயிற்றில் நுண்கிருமிகள் இருந்தால் தான் வாயில் துர்நாற்றம் ஏற்படும். வாய் துர்நாற்றம் பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலையின் சாறை எடுத்து பருக வேண்டும். இது வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை நிரந்தரமாக நீக்கும்.
முகப்பரு வராமல் தடுக்கும்:
வெற்றிலை மற்றும் மஞ்சளை சேர்த்து நன்கு அரைத்து அதனை முகப்பரு இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு நீங்கிவிடும். முகம் பொலிவாக இருக்கும். உங்கள் முகத்தில் முகப்பரு இருந்தால் நீங்கள் இதை ட்ரை பன்னி பாருங்கள்.
வியர்வை துர்நாற்றம் நீங்கும்:
வெயில் காலம் ஆர்மபித்து விட்டதால் அனைவர்க்கும் வியர்வை தொல்லை இருந்துகொண்டே இருக்கும். இந்த வியர்வை துர்நாற்றத்தை நீக்க வெற்றிலை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த வெற்றிலையை சேர்த்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி குளிக்கும் தண்ணீரில் குளித்தால் வியர்வை துர்நாற்றம் ஏற்படாது.
அல்ர்ஜி குணமாகும்:
நம் உடலில் உள்ள அல்ர்ஜி, எரிச்சல் போன்ற சரும பிரச்சனைகளுக்கு வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். ஆன்டி பாக்டீரியாஸ் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி போன்ற பண்புகள் இதில் நிறைந்துள்ளதால். வெற்றிலை சரும பிரச்சனைகளுக்கு உடனடி தேர்வினை அளிக்கும்.
Betel Leaf Water Benefits in Tamil
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |