காலை எழுந்து குடிக்கிற காபி
வணக்கம் அன்பான நண்பர்களே..! இன்றைய பதிவில் காலையில் எழுந்தவுடன் என்ன குடிக்க வேண்டும். அதனை குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்வோம். பெரும்பாலான நண்பர்கள் காலை எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் தான் அதிகம் உள்ளது. சில நண்பர்கள் தண்ணீர் குடிப்பார்கள். காலை எழுந்ததும் என்ன குடிக்க வேண்டும் அதை குடித்தால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ வெறும் வயிற்றில் பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்
காலை எழுந்ததும் எதை குடிக்க வேண்டும்:
நம் முன்னோர்கள் காலை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு நீரெலாம் குடிப்பார்கள். நீராலாம் என்றவுடன் சில நபர்கள் யோசிப்பீர்கள்..! நீராலாம் என்றால் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே இருந்து காலையில் அதில் உள்ள தண்ணீரை குடிப்பார்கள் இதற்கு பெயர் தான் நீராலாம். அந்த காலத்தில் உள்ளவர்கள் வேப்ப குச்சியை வைத்து பல் துலக்கினார்கள். இப்போது அப்படியா காலை எழுந்ததும் பேஸ்ட் என்ற விஷ கிருமியை வாயில் செலுத்துகிறோம். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் வெந்நீர் குடியுங்கள். வெந்நீர் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துகொள்வோம்.
சளி இருமல் குணமாக:
காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் குடிப்பது சளி, இருமல், தொண்டை வலி பிரச்சனைக்கு சிறந்த மருந்தாகும். சளியை குறைத்து சுவாச பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டை புண்ணிலுருந்து விடுபட செய்யும்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்:
காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. தசை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நரம்பு மண்டலத்தை சுற்றியுள்ள கொழுப்பு மண்டலத்தை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் தினமும் காலை எழுந்ததும் வெந்நீர் குடியுங்கள்.
முடி பளபளப்பு:
பளபளப்பான தலை முடி வேண்டுமென்றால் காலை எழுந்ததும் வெந்நீர் குடியுங்கள். தலைமுடியின் வேர்களை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. முடிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
நச்சுத்தன்மை:
காலை எழுந்ததும் சூடு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றுகிறது. வெந்நீர் குடிப்பதால் உடலின் வெப்ப நிலையை அதிகரிக்கும். இதனால் வியர்வை ஏற்பட்டு உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்ற வெந்நீர் உதவுகிறது.
பித்த தோஷம்:
பித்தத்தை கட்டுப்படுத்த காலையில் வெந்நீர் குடிக்க வேண்டும். மேலும் செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். பித்த நிலை சரியாக இருந்தால் செரிமான பிரச்சனை ஏற்படாது. அதனால் தினமும் காலை எழுந்ததும் வெந்நீர் குடியுங்கள்.
எடை குறைய:
எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை எழுந்ததும் வெந்நீர் அருந்துங்கள். வெந்நீர் குடிப்பதால் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |