முடவாட்டுக்கால் கிழங்கு தீமைகள் | Mudavattukal Kilangu Side Effects in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முடவாட்டுக்கால் கிழங்கு தீமைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். முடவாட்டுக்கால் கிழங்கு பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த முடவாட்டுக்கால் கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கிறது. இவற்றின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.
அது என்ன முடவாட்டுக்கால் கிழங்கு? அதனுடைய பயன்கள் என்ன?
முடவாட்டுக்கால் கிழங்கு என்பது, பெரணி வகை தாவரத்தின் கிழங்கு ஆகும். முடவாட்டுக்கால் கிழங்கு ஆனது, ஆட்டுக்கால், முடவன் ஆட்டுக்கால் மற்றும் ஆட்டுக்கால் கிழங்கு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் 1 கிலோ விலை தோராயமாக ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது. இது கொல்லிமலைப் பகுதியிலும், ஏற்காடு மலைப்பகுதியிலும் அதிகமாக கிடைக்கிறது. இக்கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஒரு சில தீமைகளும் இருக்கதான் செய்கிறது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Mudavattukal Kilangu Side Effects in Tamil:
- முடவாட்டுக்கால் கிழங்கில் பெரும்பாலும் நன்மைகள் தான் இருக்கிறது. ஆனால், முடவாட்டுக்கால் கிழங்கை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலில் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
- முடவாட்டுக்கால் கிழங்கில் அதிக அளவில் ஃபைபர் இருப்பதால் இதனை அதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
- அதுமட்டுமில்லாமல், முடவாட்டுக்கால் கிழங்கில் உள்ள ஃபைபர் ஆனது வயிற்றில் வளிமங்களை உருவாக்கி காற்றழுத்தத்தை அதிகரிக்கச்செய்யும்.
- முடவாட்டுக்கால் கிழங்கில் சோலானின் என்ற ஆல்கலாய்டு அதிகம் இருப்பதால், அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் ஆல்கலாய்டு நஞ்சாக செயல்படலாம்.
- எனவே, முடவாட்டுக்கால் கிழங்கை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் முடவாட்டுக்கால் கிழங்கை அளவோடு சாப்பிட வேண்டும்.
முடவாட்டுக்கால் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது.?
வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் முடவாட்டுக்கால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கு பிரச்சனை இதனை தவிர்த்துக்கொள்வது நல்லது. அல்லது குறைவாக சாப்பிடுவது நல்லது.
தேங்காய் பாலில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |