பச்சை பயிறு பயன்கள்
நண்பர்களே வணக்கம் இன்று ஆரோக்கியம் பதிவில் அதிகளவு மக்களை துன்புறுத்தி வரும் நோயாக விளங்குகிற சுகர் பிரச்சனை சரியான நிலையில் வைக்க என்ன செய்ய வேண்டும் என்ற பதிவை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக அனைவரும் சுகரை நார்மலாக வைப்பதற்கு நிறைய வகையான வழிகளை பின் பற்றி வருவார்கள் ஆனால் அதற்கென்று சரியான பலன்களை தரவில்லை என்று யோசிப்பீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று ஒரு முக்கியான பொருளை தினமும் சாப்பிட்டுவதால் சுகர் கொழுப்பு இரண்டுமே சரியான நிலையில் இருக்கும். வாங்க அது என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!
Pachai Payaru Benefits in Tamil:
அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருள் என்றால் முளைகட்டிய பயிறு ஆகும். இதில் கலோரிகள் குறைவு அதேபோல் நார்ச்சத்துக்கள் அதிகம் அடக்கியுள்ளது. புரதம் அதிக உள்ளது கொழுப்பு சத்துக்கள் இல்லாமலும் உள்ளது.
முளைகட்டிய 50 கிராம் பயிரில் 3 கிராம் கலோரிகள் உள்ளது இதனால் செரிமானத்திற்கு உதவுகிறது. அது மட்டுமில்லாமல் கொலஸ்டரால் அளவையும் குறைக்கிறது.
முளைகட்டிய பயிரில் பச்சையம் இல்லாததால் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரிய அளவில் மருத்துவ உணவாக திகழ்கிறது. முளைகட்டிய பயிரில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது அதாவது வைட்டமின் பி அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் முளைகட்டிய பயிரில் தாமிரம், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
Mulaikattiya Payaru List in Tamil:
முளைகட்டிய பயிரை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதால் கொலஸ்டரால் தடுக்கிறது.
உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.
மலச்சிக்கலை தடுத்து செரிமான மண்டலத்தில் எந்த பிரச்சனையும் வராமலும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்.
இவற்றில் இருப்பு சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் இரத்த சோகை வராமல் தடுத்து இரத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
முடி உதிர்வு மற்றும் முகம் அழகான தோற்றத்தை பெறுவதற்கும் இந்த முளைகட்டிய பயிறு பெறும் அளவில் உள்ளது.
பச்சை பயிரை முளைக்கட்டுவது எப்படி?
முதலில் பாசிப்பயிறு தண்ணீரில் கழுவி கொள்ளவும். பயிறு சுத்தமாக எடுத்து. பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது வெப்பம் தெரியும் அளவு 8 அல்லது 12 மணி நேரம் ஊறவைக்கவும். அப்படி ஊறவைக்கும் போது ஒரு துணியால் மூடிக்கொள்ளவும்.
மறுநாள் காலையில் ஊறவைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்துகொள்ளவும்.
வடிகட்டி எடுத்த பயிரை ஒரு துணியில் வெளியில் படாமல் கட்டி வைக்கவும்.
கட்டி வைத்த முலைபயிரில் வெள்ளையாக முலை தொடங்கும் வரை ஒரு நாளுக்கு ஒரு முறை கழுவுதல் மற்றும் வடிகட்டுதல் தொடர்ந்து செய்து வரவும். ஈரமான துணியில் கட்டிவைக்கும் போது துணி ஈரமாக உள்ளதா என்பதை பார்த்து கொள்ளவும். அப்படி இருக்கும்பட்சத்தில் நான்காவது நாள் நீங்கள் நினைத்தது போல் பச்சைப்பயிறு வளர்ந்து இருக்கும் அதனை நீங்கள் விருப்பத்தை போல் உணவிலோ அல்லது சாதாரணமாகவோ சாப்பிடலாம்.
பாசி பயறு பயன்கள் |
நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |