Mulberry Fruit Benefits In Tamil
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பழம், காய்கறிகள் போன்றவற்றில் தான் கிடைக்கிறது. ஆனால் மனிதர்களோ ஊட்டச்சத்து நிறைந்திருக்கும் காய்கறிகளை விட துரித உணவுகளை தான் பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். அதனால் அவர்கள் உடலில் சத்துக்கள் குறைந்தே இருக்கிறது.
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் நோய்கள் வராமல் இருப்பதற்காகவும், நாம் துரித உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். எனவே இன்றைய பதிவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மல்பெரி பழத்தின் பயன்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
மல்பெரி பழத்தின் பயன்கள்:
மல்பெரி பழத்தில் ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
கல்லீரல் பாதுகாப்பு:
மல்பெரி பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் கல்லீரலை பராமரித்து, கல்லீரல் வலுவடைய செய்யும். மேலயும் கல்லீரலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
சரும பிரச்சனைகள் நீங்கும்:
மல்பெரி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்கும். மேலும் மல்பெரி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவு உண்டாகும்.
மூளை சமத்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்:
மல்பெரி பழத்தில் அதிக கால்சியம் இருப்பதால் மூளையை பராமரித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்கிறது:
மல்பெரி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை அகற்றி இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
கேட்ராக்ட் நோயை தடுக்கிறது:
மல்பெரி பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கேட்ராக்ட் என்கிற கண் புறை நோயை வர விடாமல் தடுக்கிறது.
முடி வளர்ச்சிக்கு உதவுகிறது:
மல்பெரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் முடி உதிர்வதை தடுத்து முடி நன்கு வளர்ச்சி அடைய உதவுகிறது. மேலும் மல்பெரியில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் இளநரையை தடுத்து முடி கருமையாக உதவுகிறது.
நீரழிவு நோய் கட்டுப்படுத்தும்:
மல்பெரி பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
புற்றுநோயை தடுக்கிறது:
மல்பெரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கிறது. மேலும் மல்பெரியில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள செரிமான பிரச்சனை நீக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |