வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Updated On: October 8, 2023 9:04 AM
Follow Us:
mullangi benefits in tamil
---Advertisement---
Advertisement

முள்ளங்கி நன்மைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்று நம் பதிவில் பல ஆரோக்கிய குணங்கள் நிறைந்த முள்ளங்கியின் நன்மைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். முள்ளங்கி கிழங்கு வகை காய்கறிகளில் ஒன்றாகும்.  இதில் அதிக நீர் சத்துக்கள் அடங்கியுள்ளது. பெரும்பாலும் இதனை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டர்கள். ஆனால் இதில் அதிகப்படியான சத்துக்களை கொண்டுள்ளது, அதாவது வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து  வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.  மேலும் இதனை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் அதனுடைய மருத்துவ குணங்களை பற்றியும்  நம் பதிவில் பார்க்கலாம் வாங்க..

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

 

இருதயம் பலம் பெற:

heart

இருதயத்தை பலப்படுத்துவதற்கு முள்ளங்கி உதவுகிறது. முள்ளங்கியில் இருதயத்திற்கு தேவையான Anthocyanin நல்ல அளவில் இருக்கிறது. இருதய சுவர்களை பலமாக்கி இருதயம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி இருதய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கும்  இந்த முள்ளங்கி சிறப்பான மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.

இரத்த அழுத்தம் சீராக:

blood pressure

இரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கு முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான பொட்டாசியம் சத்து முள்ளங்கியில் அதிக அளவில் இருப்பதால்  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

இரத்த சர்க்கரை நோய்கள்:

Blood sugar diseases

இரத்த சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முள்ளங்கி உதவியாக இருக்கிறது. முள்ளங்கியில் Anti diabetic properties நல்ல அளவில் இருப்பதால் நேரடியாக  இன்சுலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

Increase immunity

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தேவையான வைட்டமின் சி முள்ளங்கியில் அதிக அளவு  இருக்கிறது. நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி வைரஸ் மற்றும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கின்றது.

செரிமான கோளாறுகள்:

Digestive disorders

செரிமான கோளாறுகளை குணப்படுத்துவதற்கு முள்ளங்கி உதவியாக இருக்கிறது. செரிமான சார்ந்த பிரச்சனைகளான நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து முள்ளங்கி சாப்பிட்டு வருவது நல்லது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் செரிமான கோளாறுகளில் இருந்து தடுக்கிறது.  அதுமட்டுமின்றி மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

கல்லீரல் சுத்தம் செய்யும் உணவுகள்:

Liver

முள்ளங்கியானது கல்லீரலை சுத்தம் செய்வதற்கும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. கல்லீரலில் இருக்க கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தம் செய்வதற்கு முக்கிய பங்கு பெற்றுள்ளது. கல்லீரலில் உற்பத்தியாக கூடிய Bilirubin உற்பத்தியை கட்டுப்படுத்தி கல்லீரலை பாதுக்காக்கிறது. அதுமட்டுமின்றி வைரஸ் கிருமிகளின் தாக்குதலையும் தடுக்க  உதவுகிறது.

அனீமியா நோய்:

Anemia

இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் ஏற்படும்  அனீமியாவை தடுப்பதற்கு முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. முள்ளங்கியில் இருக்க கூடிய அதிகப்படியான இரும்பு சத்துக்கள் இரத்த அணுக்களை அதிகப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சிவப்பணுக்களை சேதமடைவதை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. எனவே அனீமியா பிரச்சனைகளில் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எளிதில் குணமாகிவிடும்.

சிறுநீரக பிரச்சனை:

Kidney

சிறுநீரகம் பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள் முள்ளங்கியை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் முதல் சிறுநீரக  தாரைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கும். அதுமட்டுமில்லாமல்  சிறுநீரகத்தில் ஏற்படும் கல் அடைப்பு பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள் முள்ளங்கி ஜூஸ்  குடித்தால் சுலபமாக கல் அடைப்பு நீங்கிவிடும். மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதற்கும் உதவியாக இருக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abirami Baskar

Hello, I m Abirami working as Junior Content Writer in Pothunalam.com, I would like to write a topics based on the following categories such as Health Tips, Beauty Tips, Recipes, Home Improvements & Banking Tips.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now