முல்தானி மெட்டியின் தீமைகள் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

Multhani metti side effects

முல்தானி மெட்டியினால் ஏற்படும் தீமைகள் என்ன?

ஹலோ நண்பர்களே வணக்கம். இன்று நம் ஆரோக்கியம் பதிவில் எல்லோரும்  தெரிஞ்சிக்க வேண்டிய ஓரு பயனுள்ள தகவலை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

நம்முடைய முக அழகை மேம்படுத்துவதற்காக எத்தனையோ அழகுமுறைகளை நாம் கையாளுகிறோம். இருந்தும் அதனால் உண்டாகும் நன்மைகளை பற்றி தெரிந்திருப்போம். ஆனால் அதன்மூலம் ஏற்படக்கூடிய தீமைகளை பற்றி தெரிந்திருக்கமாட்டோம். அப்படிப்பட்ட அழகு முறைகளில் ஓன்று தான் “முல்தானி மெட்டி”. பெரும்பாலும் இதை பயன்படுத்துபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்திருப்பீர்கள். இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் நம் ஆரோக்கியம் பதிவில் பார்க்கப்போகிறோம்.

முல்தானி மெட்டி என்றால் என்ன:

முல்தானி மெட்டி என்று சொல்லக்கூடிய இது கடுமையான இரசாயன சிகிச்சையை பயன்படுத்தாமல் எண்ணெய் அல்லது பிற திரவங்களை நிறமாக்கும் திறன் கொண்ட ஒரு வகை களிமண் ஆகும்.இது “பாலிகோர்ஸ்கைட்” அல்லது பேண்டோனைட்டைக் கொண்டுள்ளது. முல்தானி மெட்டியை ஆங்கிலத்தில்” Fuller’s Earth” என்று கூறுகிறார்கள். இது பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற இடத்தில் கிடைப்பதால் இதை “முல்தானி மெட்டி “ என்று அழைக்கப்படுகிறது. இது சருமத்தின் அழகு மற்றும் தரத்தை மேம்படுத்தவும் அழகுபடுத்தவும் பயன்படுகிறது. இது மற்ற மண்களைக் காட்டிலும் தனித்துவமாக இருக்கிறது. முல்தானி மெட்டி தயாரிக்க நுண்ணிய சிலிகேட்டுகள் மற்றும் பல தாதுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. முல்தானி மெட்டி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முகம்  மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் முல்தானி மெட்டி பயன்படுகிறது. இருந்தாலும் இதை பயன்படுத்துவதால் தீமைகளும் உண்டாக்குகிறது. அதனால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

இது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்

Side Effects Of Multani Metti:

Multhani Metti Powder

  • முல்தானி மெட்டியை பயன்படுத்துவதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். முல்தானி மெட்டி ஒரு இயற்கை மூலிகை தான். இருந்தாலும் இதனை பயன்படுத்துவதால் சிலருக்கு பக்கவிளைவுகளும் உண்டு.
  • பெரும்பாலும் சளி தொல்லை மற்றும் இருமல் பிரச்சனை உள்ளவர்கள் முல்தானி மெட்டியை பயன்படுத்த வேண்டாம். காரணம் இது குளிர்ச்சி தன்மை உடையது. அதிக குளிரூட்டும் திறன் காரணமாக சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதனால் இது சளி மற்றும் இருமல் உருவாக காரணமாகிறது.
  • முல்தானி மெட்டியை கலப்பு வகை தோல் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. காரணம் முல்தானி மெட்டி கலப்பு தோள்களை வறண்டு போக வைக்கிறது.
  • வெயில் காலத்தில் சிவப்பாகவும், வறண்ட சருமாமகவும் இருந்தால் முல்தானி மெட்டி பயன்படுத்தக்கூடாது.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்

Multhani Metti redimix

  • முல்தானி மெட்டியை வறண்ட அல்லது அதிக உணர்திறன் கொண்ட சருமத்திலோ பயன்படுத்தக்கூடாது. காரணம் முல்தானி மெட்டியின் அதிக உறிஞ்சுதல் தன்மையை கொண்டது. அதனால் இது உங்களின் சருமத்தை வறண்டு போகச்செய்யும்.
  • நீங்கள் முல்தானி மெட்டியை பயன்படுத்துவதற்கு மாறாக, கயோலின் எனப்படக்கூடிய களிமண்ணை பயன்படுத்தலாம்.
  • முல்தானி மெட்டி  உபயோகிப்பதற்கு முன்னால் உங்களின் தோலின் ஒரு பகுதியில் சிறிதளவு பயன்படுத்தி பார்க்கவும். பின் எந்தவிதமான அலர்ஜி மற்றும் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படவில்லை என்றால், நீங்கள் அதை பயன்படுத்தலாம்.
  • முல்தானி மெட்டியை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு எளிதில் எரிச்சல் ஏற்பட்டால் அதை உபயோகிப்பதை நிறுத்தவேண்டும். இது உங்கள் சருமத்தின் இயற்கையான pH சமநிலையை பராமரிப்பதற்கு சிறந்த வழியாக இருக்காது.
  • நீங்கள் முல்தானி மெட்டியை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் சுருக்கங்களை பெறலாம்.

Multani Metti Side Effects On Hair:

  • நீங்கள் முல்தானி மெட்டியை தலைக்கு பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காரணம், தலையில் தேய்க்கும் போது, அது உங்கள் முடியின் வேர் பகுதியில் ஒட்டி கொள்ளும். உங்களுடைய முடி வலுவானதாக இருந்தால் பயப்பட தேவையில்லை. அதுவே வலுவற்ற முடியாக இருந்தால் அதிகமான முடி உதிர்வை ஏற்படுத்தும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000