கிர்ணி பழம் பயன்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கிர்ணி பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்பட கூடிய ஆரோக்கிய நன்மைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே பழங்கள் என்றாலே பல ஆரோக்கியங்களை தரக்கூடியவைதான். அந்த வகையில் இந்த கிர்ணி பழமானது அதிக ஆரோக்கியத்தை கொண்டுள்ளது. இந்த பழம் மட்டுமின்றி அதனுடைய விதைகளும் பல மருத்துவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பழத்தை ஜூஸ் செய்து குடித்து வருவதினால் பல நன்மைகளும் ஏற்படுகின்றன. அதோடு மட்டுமில்லால் சருமத்தை பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவற்றின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
செவ்வாழை பழம் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா..? |
Muskmelon inTamil:
முதலில் இதனுடைய ஆரோக்கியத்தை தெரிந்துகொள்வதற்கு முன்னாடி அந்த பழத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த கிர்ணிப்பழத்தை இரண்டு விதமாக கூறுவார்கள் அதாவது முலாம் பழம் என்றும் கிர்ணிப்பழம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பழம் பார்ப்பதற்கு வெள்ளரிப்பழம் போல இருக்கும்.
இந்த பழத்தை சாப்பிடுவதற்கு ஆரம்பித்தால் அதை மீதம் வைத்து சாப்பிட கூடாது. ஏனென்றால் மீதம் வைத்து சாப்பிடும் பொழுது அதனுடைய சத்துக்களை அது இழந்துவிடும், எனவே மீதம் வைக்காமல் அதை ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
முலாம் பழம் நன்மைகள்:
இந்த கிர்ணிப்பழமானது உடலில் அதிக நன்மைகளை தரக்கூடியதில் இதுவும் ஒன்றாகும். இந்த பழத்தில் புரதம், இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், வைட்டமின் A மற்றும் B,C போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளளது.
கர்ப்பிணி பெண்கள் முலாம் பழம் சாப்பிடலாமா:
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்றாகும். கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் குழந்தையின் முதுகு எலும்பு மற்றும் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாகவும், நன்றாகவும் இருக்கும். இந்த பழத்தில் கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
சருமத்தை பாதுகாக்க:
வறண்ட சருமங்கள் இருப்பவர்கள் கிர்ணி பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதால் இதில் இருக்கும் நீர் சத்துக்கள் வறண்ட சருமத்தில் இருந்து தடுத்து தோள்களை மிருதுவாகவும், பாதுக்காப்பாகவும் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது.
உடல் சோர்வு நீங்க:
உடலில் காய்ச்சல், சோர்வு, வயிற்று போக்கு போன்ற உடல் சோர்வுகளினால் பாதிக்கப்படும் பொழுது இந்த கிர்ணி பல சாற்றை அருந்தி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றன. இதில் அதிகப்டியான நீர்ச்சத்துக்கள் இருப்பதால் மூளை சோர்வு அடைவதை தடுக்கிறது.
இதய நோய் பிரச்னைகள்:
இந்த கிர்ணி பழமானது இரத்தத்தின் கெட்டி தன்மையை குறைக்கும் சக்தியை அதிகம் கொண்டுள்ளதால் இதய நோய் வராமல் தடுப்பதற்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது.
சிறுநீர் தாரை எரிச்சல்:
முலாம் பழத்தில் அதிகமான நீர்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இந்த கிர்ணிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு அதில் சிறிது பனங்கற்கண்டு, சீரகம், சுக்கு பொடிகள் போன்றவற்றை சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து குடிக்கும் பொழுது சிறுநீரக தாரையில் ஏற்படும் எரிச்சல்கள் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
கிர்ணிப்பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும். அதோடு வாய் புண், வயிற்று புண், தொண்டை புண், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதற்கு கிர்ணிப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடவேண்டும்.
கண் பிரச்சனை:
கிர்ணி பழத்தில் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் கண் பார்வை பிரச்சனைகளை குறைக்கும் தன்மையையும், கண்களில் இருக்கும் நரம்புகளுக்கு ஊட்டச்சத்தும் தருகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |