மைசூர் மல்லி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Advertisement

Mysore Malli Rice Benefits in Tamil | மைசூர் மல்லி அரிசி பயன்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மைசூர் மல்லி அரிசி பயன்கள்/நன்மைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். மைசூர் மல்லி அரிசி பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஏன் நம் வீடுகளில் கூட சமைத்து இருப்போம். ஆனால், அவற்றின் நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் மைசூர் மல்லி அரிசி பயன்கள் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் பிரபலம் அடைந்த நெல் வகைகளில் ஒன்று மைசூர் மல்லி ஆகும். இது, கர்நாடக மாநிலத்தில் அதிகமாக பயிர்ப்படும் நெல் வகையாகும். அதுமட்டுமில்லாமல், பாரம்பரிய நெல் இரகமாகவும் உள்ளது. தமிழகத்திலும் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட நெல் ரகமாகும். இதன் சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும். இதனை சிறப்புகள் கொண்ட மைசூர் மல்லி அரிசியின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா.?

குதிரைவாலி அரிசி பயன்கள்

மைசூர் மல்லி அரிசி மருத்துவ குணங்கள்:

மைசூர் மல்லி அரிசி பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி:

மைசூர் மல்லி அரிசி ஆனது, மிகுந்த மருத்துவ குணம் மிக்கதாகவும், சத்து நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. மைசூர் மல்லியில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் தன்மை அதிகம் உள்ளது. இதனை நாம் சாப்பிட்டு வரும்போது நம்முடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

எளிதில் ஜீரணம்:

மைசூர் மல்லி அரிசி எளிதில் ஜீரணம் அடையக்கூடியது. எனவே, இதனை எந்தவித பயமுமின்றி இந்த அரிசியை சாப்பிடலாம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மைசூர் மல்லி அரிசியை சமைத்து சாப்பிட்டு வரலாம். உடல் ஆரோக்கியமும் மேம்ப்படும், செரிமான பிரச்சனையும் தீரும்.

குழந்தைகளுக்கு ஏற்றது:

மைசூர் மல்லி அரிசி எளிதில் ஜீரணம் அடையும் தன்மை கொண்டதால், இதனை குழந்தைகளுக்கு உணவாக அளிக்கலாம். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

தூயமல்லி அரிசி நன்மைகள்

மைசூர் மல்லி அரிசி பயன்கள்:

  • எளிதில் வேகக்கூடியது.
  • எளிதில் ஜீரணம் அடையக்கூடியது.
  • வெண்மையாகவும் மென்மையாகவும் இருக்கக்கூடியது.
  • அனைத்து பலகாரங்களுக்கும் ஏற்றது.
  • பழுப்பு நிற நடுத்தர ரகம்.
  • மன்னர்களால் மிகவும் விரும்பப்பட்ட அரிசி.
  • பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.
  • மைசூர் மல்லி அரிசி கஞ்சி உடலிற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement