நாவல் பழம் மருத்துவ குணங்களை தெரிஞ்சிகோங்க..!

Advertisement

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்..! Jamun Fruit Benefits in Tamil..!

Jamun fruit benefits in tamil:- நாவல் பழம் மரம் ஒரு அற்புதம் நிறைந்த மரமாகும். இந்த மரத்தின் இலை, பட்டை, பழம், வேர், விதை என்று அனைத்துமே மருத்துவ பயன்களை பெற்றுள்ளது. மேலும் இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்புச்சத்து, சோடியம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

மேலும் இவற்றில் உள்ள இரும்புசத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது. சரி இந்த பதிவில் நாவல் பழம் நன்மைகள் பற்றி சிலவற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

நாவல் பழம் நன்மைகள்..! Naval palam benefits in tamil..!

நீரிழிவு நோய்:

நாவல் பழத்தின் விதைகள் நீரிழிவு நோயை குணப்படுத்த சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ளவேண்டும்.

பின் ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் குணமடையும்.

மாதவிடாய்:

முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும்.

இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் மற்றும் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

newJamun fruit benefits in tamil

சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகும். இதனை குணமாக்க நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும்.

தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் 2 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரில் எரிச்சல் தீர்ந்து நீர்க்கட்டும் குணமாகிவிடும்.

வயிற்றுப்போக்கு:

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

குடல்புண்:

நாவல் மரத்தின் பட்டையை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீரை சுண்டக்காய்ச்சிய பின் இதமான சூட்டில் வாய் கொப்பளித்து வரவேண்டும்.

தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் குடல்புண், தொண்டைப் புண் மற்றும் தொண்டை அழற்சி குணமாகும்.

மலட்டுத்தன்மை:

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயம் போல செய்து அதனுடன் தேன் அல்லது வெண்ணெய் கலந்து அளவோடு சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.

இதயநோய்:

நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடைந்து, இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும்.

மேலும்  நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். மருத்துவ குணம் உள்ள பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம் இந்த நாவல்பழம். ஏப்ரல் மாத மத்தியில் இருந்து நாவல் பழங்கள் சீசன் துவங்குகிறது.

newவயிற்றுப்புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement