Have a Healthy Nails Tips In Tamil
நீங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரிவது உங்கள் ட்ரெஸ்ஸிங் சென்சில் இருந்து உங்களை அழகாக்க நீங்கள் பயன்படுத்தும் பேஸ் கிரீம்களில் மட்டும் இல்லை. உங்கள் நகத்திற்கும் அதில் அதிக பங்குண்டு. ஆரோக்கியமான நகத்தை பெறுவதற்கு நீங்கள் உங்கள் நகங்களை சுகாதார முறையில் பாதுகாக்க வேண்டும். அது உங்களை அழகாக காட்டுவது மட்டுமில்லாமல் உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பொதுவாக பெண்கள் அவர்களுடைய விரல் நகமாக இருந்தாலும் சரி கால் நகங்களாக இருந்தாலும் சரி அதனை பராமரிக்க நீங்கள் நிறைய வழிகளை பணத்தை செலவு செய்து செய்கிறீர்கள். நீங்கள் எளிமையாக உங்கள் நகங்களை பராமரிக்க நினைத்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நகங்களை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க இப்படி செய்யுங்கள் :
- உங்கள் நகங்களை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். அழுக்கு சேராமல் பார்த்து கொள்ளுங்கள். முடிந்தவரை வாரத்தில் இரண்டு முறை வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் நகங்களை கழுவுங்கள்.
- நகங்களை கழுவிய பின் நகங்களை உலர வையுங்கள் அப்போது தான் பாக்டீரியா மற்றும் பூஞ்சை பாதிப்புகள் ஏற்ப்படாமல் இருக்கும்.
- நீங்கள் நீட்டமான நகங்களை கை விரல்களில் வளர்க்க நினைத்தால் அதனை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். அது உடையாமல் இருக்க நீங்கள் கடினமான பொருட்களை திறப்பது மற்றும் பேக்கஜ்களை நகங்களை வைத்து பிரிப்பது போன்ற வேலைகளை செய்யாமல் இருப்பது உங்கள் நகங்கள் உடையாமல் இருக்கும்.
- நீங்கள் நீச்சல் குளங்கள் மற்றும் பொது இடங்களில் செல்லும்போது உங்கள் நகங்களை உலர்வாக வைத்திருங்கள். பொதுஇடங்களில் காணப்படும் கிருமி தொற்றுகள் உங்கள் நகங்களை பாதிக்காமல் நன்றாக கழுவி விடுங்கள். பின் அதனை நன்றாக காய விடுங்கள்.
- உங்கள் கை நகங்கள் மற்றும் கால் நகங்கள் தடித்து நகங்கள் சிவந்து காணப்பட்டால் சுகாதார மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், அது நோய்களின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.
நக சொத்தை சரியாக என்ன செய்யலாம் :
கை விரல் நகங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் பொதுவாக நக சொத்தை கால் விரல்களில் தான் அதிகமாக வருகிறது. நக சொத்தை கால் விரல் நகங்களில் வந்தாலும் சரி கை விரல் நகங்களில் வந்தாலும் சரி கீழ் காண்பவை போல் செய்யுங்கள்.
- உங்கள் காலில் நக சொத்தை இருந்தால் முதலில் நக சொத்தை உள்ள இடத்தை சுத்தமாக கழுவிடுங்கள் பின் அதில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி தேய்த்து கொள்ளுங்கள்.
- ஒரு டப்பில் அந்த டப் பாதியளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றிக்கொள்ளுங்கள். பின் அதில் எலுமிச்சை சாறு 5 ஸ்பூன் அளவிற்கு ஊற்றிக்கொள்ளுங்கள். மஞ்சள் தூள் 1/4 ஸ்பூனிற்கு போட்டு கொள்ளுங்கள். அதோடு 1/2 ஸ்பூன் சோடாப்பூ சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- இப்போது இந்த வெதுவெதுப்பான தண்ணீரில் இரு கால்களையும் விட்டு ஒரு 10 நிமிடத்திற்க்கு வையுங்கள். அப்போது தான் அந்த தண்ணீரில் நாம் சேர்த்த மருந்துகள் சொத்தை நகங்களில் சேர்ந்து அதில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை சரி செய்யும்.
- இன்னும் சிம்பிளாக ஒரு எளிய வைத்தியம் நக சொத்தைகள் குணமாக இருக்கு. அ துதான் மருதாணி எல்லார் வீட்டிலேயும் எளிதாக கிடைக்க கூடியது. நீங்கள் கிராம புறமாக இருந்தால் உங்கள் ஊரில் ஒரு வீட்டில் கூட மருதாணி இல்லாமல் இருக்காது. அப்படி நீங்கள் நகர் புறமாக இருந்தாலும் மருதாணி பவுடர் பயன்படுத்திக் கொள்ளலாம். மருதாணியை நக சொத்தை இருக்கும் இடத்தில் கொப்பி போல் போட்டு கொள்ளலாம். இதனால் மிக விரைவில் நக சொத்தைகள் காணாமல் போய்விடும்.
அழகான மற்றும் நீளமான நகம் வேண்டுமென்றால் இப்படி பண்ணுங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |