உங்கள் விரல் நகம் சொல்லும் உங்களின் எதிர்காலம்

Nail symptoms

நமக்கு என்ன நோய் உள்ளது என்று தெரிந்து கொள்ள மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இல்லை நம் நகங்களை பார்த்தே (nail symptoms) நமக்கு என்ன நோய் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

சரி வாங்க நகங்களை பார்த்து (nail symptoms ) நமக்கு என்ன நோய் இருக்கும் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

தைராய்டு:

உங்கள் கைகள் நகமானது நக படுக்கையில் இருந்து தளர்ந்து அல்லது பிரிந்துவிடும் நிலை ஏற்பட்டால் அது ONYCHOLYSIS என்று அழைக்கின்றனர்.

இந்த ONYCHOLYSIS பெரும்பாலும் கைளின் மோதிரவிரல் மற்றும் சுண்டு விரல்களில் ஏற்படுகிறது. ஒருவருக்கு தைராய்டு கோளாறுகள் அதிகரித்து உள்ளது என்றால் ONYCHOLYSIS என்னும் இந்த கோளாறுகள் ஏற்படும்.

நகங்களில் அதிக இடைவெளி விழுந்துவிட்டால் அழுக்குகள் மற்றும் மண் நுழைந்து நகங்களில் நோய்களை ஏற்படுத்தும். அதேபோல் நகங்களில் உட்குழிகள் விழுந்தாலும் தைராயிடு பிரச்சனை உள்ளது என்ற அறிகுறிகளாகும்.

இதய நோய்:

உங்கள் நகங்களில் ஏதேனும் சிவப்பு அல்லது செம்பழுப்பு கோடுகள் அல்லது புள்ளிகள் இருந்தால் அவற்றை SPLINTER HEMORRHAGES என்று அழைக்கின்றனர்.

ஒருவருக்கு இதய வால்வுகளில் தொற்றுகள் அல்லது இரத்த நாளங்களில் வீக்கங்கள் ஏற்படும்போது நகங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது.

மேலும் பிறவி இதய குறைபாடு உள்ளவர்களின் நகங்கள் உப்பிய நிலையில் வட்டமாகவும், அகலமாகவும் காணப்படும்.

எனவே இவ்வாறு அறிகுறிகள் காணப்பட்டால் கட்டாயமாக ஒரு இதய நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

கவலை மற்றும் மன அழுத்தம்:

ஒருவர் தினமும் நகம் கடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாலோ அல்லது தங்களை அறியாமல் நகம் கடித்து துப்பி கொண்டே இருந்தால் அது உளவியல் சம்மந்தமான பிரச்சனையாக இருக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றனர். இவற்றை ONYCHOPHAGIA என்று அழைக்கப்படுகிறது.

பதட்டம், மன அழுத்தம், கவலை போன்றவற்றை ONYCHOPHAGIA என்று சொல்லப்படுகிறது. எனவே தொடர்ந்து தினமும் நகத்தை கடித்து கொண்டே இருந்தால் வாயின் வழியாக நோய் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நகம் கடிப்பதை தவிர்க்க கசப்பான திரவங்களை நகத்தில் தடவலாம் அல்லது அதற்கான தடுப்பு வழிகளை கடைபிடிக்கலாம்.

நீரிழிவு நோய்:

உங்கள் கை விரல்களின் நகங்கள் வெண்மை நிறத்தில் இருந்து, மிதமான மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமாகும்.

நீரிழிவு நோயானது தோல் மற்றும் நகங்களை மஞ்சள் நிறத்தை அடைய வழிவகுக்கிறது. இருப்பினும் நகங்களில் தான் இந்த நோய் தாக்கங்கள் வெளிப்படையாக தெரியும்.

நகங்களில் collagen protein உடன் குல்கோஸ் இணைந்திருப்பதினால் தான் நகங்களில் நிறமாற்றங்கள் ஏற்படுகிறது.

நகங்களில் மஞ்சள் நிறமும் (nail symptoms), அதிக தாகமும் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதாக இருந்தால் நீங்கள் கட்டாயமாக ஒரு நீரிழிவு நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

நுரையீரல் கோளாறுகள்:

உங்கள் விரல் அடர்ந்த நீலநிறமாக இருந்தால் உங்களுக்கு நுரையீரல் சம்மந்தமான கோளாறுகள் இருக்கின்றது என்று அர்த்தமாகும். நுரையீரல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு நகங்கள் மற்றுமின்றி உதடுகளும் அடர்ந்த நீலநிறமாக காணப்படும்.

குறிப்பாக ஆஸ்துமா, ஹீமோகுளோபின் குறைவு, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய், நிமோனியா, எம்பிசிமா மற்றும் நாள்பட்ட மூச்சி குழாய் அழற்சி போன்ற சுவாசநோய் உள்ளவர்களுக்கு நகங்களும், உதடுகளும் அடர்ந்த நீலநிறத்தில் காணப்படும்.

எனவே இவ்வாறு தங்களுக்கும் நகங்கள் அல்லது உதடுகள் நீலநிறத்தில் காணப்பட்டால் உடனடியாக சுவாச நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

ஆலோசனை பெற தவறினால் தீவிர நுரையீரல் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும்.

மூட்டுவலி:

மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு மட்டும்தான் ஏற்படக்கூடியநோய் என்பது அனைவரது தவறான நினைப்பாகும். ஆனால் osteoarthritis என்னும் மூட்டுவலி நோய் அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய மூட்டுவலி நோயாகும்.

மூட்டு நோய்களில் பலவகைள் உள்ளது. அவற்றில் சில நோய்கள் விரல் நகங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவையும் இருக்கின்றன.

உங்கள் நகங்கள் பலவீனமாக இருந்தால் அது osteoarthritis என்னும் மூட்டுவலி நோய்க்கான அறிகுறிகள் ஆகும். அதே போல் நகங்களில் சிறிய குழிகள் அல்லது வரிகள் இருந்தால் அது psoriatic arthritis என்ற நோய் தாக்கியுள்ளதாக அர்த்தமாகும்.

அதே போல் நகங்களை ஒட்டியுள்ள தோல்களில் வீக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அது lupus என்ற நோய் தாக்கியுள்ளதாக அறிகுறிகளாகும். மேலும் நகத்தின் அடித்தளத்தில் சிவப்பு நிறத்தில் பிறை போன்று வடிவம் தோன்றினால் அது rheumatoid arthritis என்னும் நோயின் அறிகுறியாகும்.

அதே போல் நகங்கள் தானாகவே சிதைந்து, உடைந்து உதிர்வதை onychomadesis என்று அழைக்கப்படுகிறது.

எனவே இவ்வாறெல்லாம் தங்களது நகத்தில் அறிகுறிகள் (nail symptoms) இருந்தால் உடனே மூட்டுவலி சிகிச்சை மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

இரத்த சோகை:

சிலருக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் நகங்கள் வெள்ளை நிறமாக காணப்படும். குறிப்பாக இருப்பு சத்து குறைப்பாட்டினால் ஏற்படும் இரத்த சோகையின் காரணமாக, நகங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

ஊட்டச்சத்து குறைப்பாடு அதிகரிக்கும் போது நகங்கள் மெலிவதோடு, நகத்தட்டுகளில் உட்குழிகள் தோன்றுவதோடு செங்குத்து முகடுகளாக காணப்படும்.

எனவே உடலில் ஊட்டச்சத்து குறைப்பாடு இருந்தால் அது பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே தினமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது.

மெலனோமா:

மெலனோமா (melanoma) என்பது ஒரு கொடிய தோல் புற்றுநோய் ஆகும். தோல் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சூரியனின் புறஉதாக் கதிர்களின் தாக்குதல்களே ஆகும்.

புறஉதா கதிர்கள், தோல் செல்களின் DNA-களை சிதைத்துவிடுவதினால் இந்த தோல் புற்று நோய் ஏற்படுகிறது. புறஊதா கதிர்கள் அதிகம் தாக்கக்கூடிய பகுதிகளான கால், கை, காது மற்றும் மூக்கு பகுதிகளில் தான் இந்த தோல் புற்று நோய் ஏற்படுகிறது.

உடல் தோல்களில் வெவ்வேரு பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்களை விட மிகவும் கொடிய புற்று நோயான acral lentiginous melanoma என்னும் புற்று நோயாகும்.

இந்த நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னவென்றால் விரல் நகங்களில் கரும் திட்டுகள் அல்லது கோடுகள் காணப்படும்.

எனவே இவ்வாறு அறிகுறிகள் ஏற்பட்டால் தோல் நோய் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE