இரவில் நன்றாக தூக்கம் வர பாட்டி சொன்ன வைத்தியம்..!

Advertisement

Thookam Vara Patti Vaithiyam | இரவில் தூக்கம் வர பாட்டி வைத்தியம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இரவில் நன்றாக தூங்க பாட்டி சொன்ன வைத்தியம் பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக, இக்காலத்தில் உள்ள பலருக்கும் இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளில் தூக்கமின்மை பிரச்சனையும் ஒன்று. தூக்கமின்மையால் பெரும்பாலானவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். காரணம், முறையற்ற உணவு பழக்கவழக்கங்களும், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பதும்.

இரவில் நீண்ட நேரம் போன் பயன்படுத்திகொண்டு தூங்காமல் 11 மணி 12 மணி என தூங்காமல் இருப்பதால், காலப்போக்கில் தூக்கம் என்பதே வராமல் போய் விடுகிறது. ஆகையால், இப்பதிவின் வாயிலாக தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் நன்றாக தூக்கம் வர பாட்டி சொன்ன வைத்தியம் பற்றி விவரித்துள்ளோம்.

Nalla Thookam Vara Patti Vaithiyam:

இரவில் தூக்கம் வர பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் 1:

முதலில் 5 அல்லது 6 அன்னாசி பூ எடுத்து கொள்ளுங்கள். அதனை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள். 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் வரை நன்றாக ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீராக வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

வடிகட்டிய தண்ணீரை மிதமான சூட்டில் குடியுங்கள். குறைந்தபட்சம் 1/2 டம்ளர் தண்ணீராவது குடிக்கவேண்டும். குடிப்பதற்கு சரியான நேரம் எதுவென்று பார்த்தால், இரவில் குடிப்பது நல்லதாகும். அதாவது, தினமும் இரவில் தூங்க செல்வதற்கு 1 மணிநேரம் முன்னதாக இந்த தண்ணீரை குடிக்கலாம். இரவு உணவிற்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த தண்ணீரை குடிக்கலாம். ஆனால், தூங்குவதற்கு 1 மணிநேரம் முன்பாக குடிக்க வேண்டும். அப்போது தான் நல்ல தூக்கம் என்பது வரும்.

அடுத்து, இந்த வைத்தியதுடன் சேர்த்து இன்னொரு முறையையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, ஜாதிக்காய் ஒன்றனை எடுத்து தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டினை இரவில் நாக்கில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். ஜாதிக்காய் அதிகம் சாப்பிட கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் இம்முறையை மாத்திற்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றபடி அன்னாசி பூ தண்ணீரை தினமும் பருகி வரலாம்.

பாட்டி வைத்தியம் 2:

சுரைக்காயை  அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதே அளவிற்கு நல்லெண்ணெய் கலந்து இரவு உச்சந்தலையில் நன்றாக தேய்த்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

பாட்டி வைத்தியம் 3:

வெங்காயத்தின் தோலை உரித்து விட்டு, வெங்காயத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement