இளம் வயதிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது தெரியுமா? முக்கிய காரணமே இதுதான்..!

Narai Mudi Vara Karanam Tamil

நரைமுடி வர காரணங்கள் – Narai Mudi Vara Karanam Tamil

Narai Mudi Vara Karanam Tamil – இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் சந்திக்க கூடிய மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இந்த இளநரை ஏன் சிறுவயதிலேயே வருகிறது? இதற்கு என்ன காரணம் போன்ற தகவல்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

வெள்ளை முடி அல்லது நரைமுடி:

பொதுவாக வெள்ளை முடி வந்துவிட்டது என்றாலே பலர் நினைப்பது வயதாகிவிட்டது என்று தான். ஆனால் இந்த நரைமுடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. அதாவது மெலனின் குறைபாடு காரணமாக தான் இந்த வெள்ளை முடி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்தகைய காரணங்கள் சரியாக தெரியாததால் தான், இளமையிலேயே நரைமுடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சரி இதற்கான காரணங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

காரணம்: 1

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கூந்தலுக்கு நிறத்தை வழங்கும் மெலனின் நிறமியும் குறைய தொடங்கும்.

காரணம்: 2

ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை இருந்தாலும் நரைமுடி வர ஆரம்பிக்கும்.

காரணம்: 3

பல பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக அவர்களது கர்ப்பகாலத்தில் நரை முடி வருகிறது.

காரணம்: 4

முடி வளர்ச்சிக்கு உதவும் பிட்யூட்டரி சுரப்பி சரியாக செயல்படாத போது முடி வெள்ளையாக மாற தொடங்குகிறது.

காரணம்: 5

உடலில் அதிக அளவில் அயோடின் சத்து குறைந்தாலும் இந்த நரைமுடி பிரச்சனை வருகிறது.

காரணம்: 6

தலை முடியின் அத்தியாவசமான தாதுப் பொருளான தாமிரத்தின் குறைபாட்டின் காரணமாகவும் நரை முடி ஏற்படும்.

காரணம்: 7

ஒரு மனிதனுக்கு அலுவுக்கு அதிகமான கோபம் படும்போது ஸ்கால்ப்பானது அதிக அளவு பாதிக்கப்படுகிறது இதன் காரணமாக தலைமுடியின் வேர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் முடி நரைக்க தொடங்குகிறது.

காரணம்: 8

ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் இரத்த சோகை காரணமாக முடி நரைக்க தொடங்குகிறது.

காரணம்: 9

தலை முடிக்கு எண்ணெய் தடவாமல் இருந்தாலும் தலை முடி அதிகளவு வறண்டு தலைமுடியின் நுனி பகுதியில் வெடிப்பு விழுந்து முடி வளர்ச்சியை தடுக்கிறது அதன் பிறகு நரை முடி வர வழிவகுக்கிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil