நார்த்தங்காய் இலையின்நன்மைகள் |Citron Leaf Benefits..!
இன்றைய பதிவில் நார்த்தங்காய் இலையின் நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் இலை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. நார்த்தங்காய் இலையில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி,இரும்புசத்து சோடியம் ,கால்சியம்,மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.நார்த்தங்காய் இலை,காய் மற்றும் பூ ஆகிய அனைத்தும் அதிக பயன்களை கொண்டுள்ளது. அப்படிப்பட்ட நார்த்தங்காய் இலையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க….
நார்த்தங்காய் இலையின் பயன்கள்:

- செரிமான பிரச்சனை இருப்பவர்கள் நார்த்தங்காய் இலையின் பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.
- இதில் அதிக அளவு நார்சத்து மற்றும் ஊட்டச்சத்து இருப்பதால் பித்தம், வாதம் போன்ற பிரச்சனையை சரி செய்கிறது.
- மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும் செனிலியம் நார்த்தங்காய் இலையில் அதிகம் இருப்பதால் இது நம் உடம்பை புத்துணர்ச்சியாகவும் , சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க செய்கிறது.
- நார்த்தங்காய் இலையின் பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க செய்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் தினமும் பயன்படுத்துவதன் மூலம் மாந்தம், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- அஜீரண கோளாறு காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
- புற்றுநோய் பிரச்சனையை சரி செய்வதில் நார்த்தங்காய் இலை முக்கிய பங்கை வகிக்கிறது.
- எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
- ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- நார்த்தங்காய் இலையை கஷாயம் வைத்து குடிப்பதன் மூலம் உடல்வலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- நார்த்தங்காய் பிஞ்சை வேகவைத்து அரைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
- நார்த்தங்காய் சாறு மற்றும் தேன் சேர்த்து காய்ச்சி தினமும் 30 மிலி குடித்து வருவதன் மூலம் இரைப்பை பிரச்சனையை சரி செய்கிறது.
- நார்த்தங்காய் இலையை வேகவைத்து உப்பு சேர்த்து ஊற வைத்து தினமும் உணவில் சாப்பிட்டு வந்தால் பசியை அதிகரிக்க செய்யும்.
எலுமிச்சை இலையின் மருத்துவ பயன்கள்..!
பயன்படுத்தும் முறை:
நார்த்த இலை துவையல் :
நார்த்தங்காய் இலையை துவையல் செய்து உணவில் சேர்த்து கொள்ளலாம். இந்த துவையல் செய்வதற்கு நார்த்த இலையை எடுத்து அதன் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி சிறிதாக நறுக்கி எடுத்துக்கவும், இதில் புளி, மிளகாய், உப்பு, தேங்காய் போன்றவற்றை சேர்த்து அரைத்து தினமும் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
நார்த்த இலை பொடி :
நார்த்தங்காய் இலையை உலர வைத்து அதன் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி அதனுடன் உப்பு, மிளகாய், உழுந்து ,பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து பொடி செய்து தினமும் இட்லி, தோசை போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட்டு வரலாம்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














