நாயுருவி செடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!

Advertisement

நாயுருவி செடியின் நன்மைகள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய தகவல்தான். நாய்யுருவி செடியின் நன்மைகள் பற்றித்தான். இந்த நாய்யுருவி செடியில் பல நன்மைகள் உள்ளன முக்கியமாக பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் மேலும் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைக்கும் இந்த நாயுருவி செடி மருந்தாக பயன்படுகின்றது அவற்றை பற்றித்தான் பார்க்க போகின்றோம்.இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

நாயுருவி செடியின் பயன்பாடுகள் :

 nayuruvi benefits in tamil

வாய் மற்றும் பல் ஆரோக்கியம்:

இந்த நாய்யுருவி செடியில் பல நன்மைகள் உள்ளன அதிலும் முக்கியமாக பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் இந்த நாயுருவி செடி ஒரு சிறந்த தீர்வாக திகழ்கின்றது. நாம் அனைவருக்கும் பல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் நாம் சாப்பிடும் உணவுகளை நன்றாக அரைத்து சாப்பிட உதவுவது இந்த பற்கள்தான். அவற்றை நாம் நல்ல முறையில் பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இந்த நாயுருவி செடி பயன்படுகின்றது இந்த நாயுருவி செடி எல்லா காலகட்டத்திலும் வளரக்கூடியது அதிலும் முக்கியமாக மழைக்காலத்தில் இந்த செடி நிறைய காணப்படும். 

நம் பற்களில் ஒரு பல்லில் ஒரு பிரச்சனை என்றால் அந்த பிரச்சனை அதனுடைய வேர்வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அதற்கு பக்கத்தில் உள்ள பலிற்கும் பாதிப்பை ஏறுபடுத்திவிடும். அதனால் நமது பற்களை அகற்றும் அளவிற்கு சென்றுவிடலாம் அதனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் கைமருத்துவம் எனப்படும் பாட்டிவைத்திய முறையில் நமது பற்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இந்த நாயுருவி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவகுணம் கொண்டது அதிலும் முக்கியமாக இதன் இலைகள் பல்,வாய் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. பற்கள் பளிச்சென்று மற்றவும் பற்களில் இருக்கக்கூடிய நுண்கிருமிகளை நீக்கவும் பல் கூச்சம்,பற்சொத்தை,ஈறுகளில் வலி,ஈறுகளில் வீக்கம் போன்றவற்றை நீக்கி பற்களை வெண்மையாக மாற்றவும் உதவுகின்ற மூலிகைகளில் நாயுருவியும் ஒரு முக்கியமான பங்குவகிக்கின்றது.

இந்த நாயுருவின் வேர்களை எடுத்து சின்ன சின்ன குச்சிகளாக வெட்டி பல்துலக்க இதனை பயன்படுத்தலாம். இதனை காயவைத்து பொடியாக நுணுக்கி சலிச்சி வைத்து பற்பொடியாகவும் பயன்படுத்தலாம் இந்த பொடியால் பல்லை துலக்கினால் பற்கள் பளபள என மின்னும்.

நாயுருவி வேருடன் கடுக்காய், தான்றிக்காய், ஏலஅரிசி, கிராம்பு, சுக்கு, கருவேலப்பட்டை, இந்துஉப்பு இவை அனைத்தையும் வைத்து தயாரிக்கக்கூடிய பற்பொடியால் பல்லை துலக்கினால் நம்முடைய பற்கள் வலுப்பெறுவது மட்டுமில்லாமல் மேலும் நமது பலிலும்,வாயிலும் எந்தவித நோய்த்தொற்றும் ஏற்படாமல் நமது பற்களை உறுதியாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு. நாயுருவி வேருடன் கடுகு எண்ணெய்,உப்பு சேர்த்து பல்லை துலக்கி வந்தால் பற்களை உறுதியாக வைத்திருக்கும் மேலும் பல்வலி இருக்காது.

சிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்க:

மேலும் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல்,சிறுநீர் தாரையில் எரிச்சல்,சிறுநீர்த்தாடை பிரச்சனைகள் இருக்கின்றவர்கள் நாயுருவி சமூலவிழுதை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவிற்கு எடுத்து பாலுடன் கலந்து குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். சிறுநீர் வராமல் சிறுநீர் கடுப்பு இருக்கும் நபர்கள் நாயுருவின் கதிரவிடாத இலையை எடுத்து இடிச்சி சாறுபிழிந்து அதனுடன் தண்ணிர் கலந்து மூன்று வேளையும் 3 மி.லி அளவுக்கு குடித்து வரவேண்டும் இதைக்குடித்தபிறகு கண்டிப்பாக பால் குடிக்கவேண்டும் தடைபட்ட சிறுநீர் விரைவிலேயே வெளியேறிடும் மேலும் உடலில் உள்ள நச்சுநீரும் இதனுடன் வெளியேற்றிடும்.  

மூலநோய் குணமாக:

மூலநோய் அதிலும் இரத்த மூலநோய் உள்ளவர்கள் இந்த நாயுருவி இலையை அரைத்து பசைப்போல் ஆக்கி அதனுடன் சம அளவு நல்ல எண்ணெய்யை சேர்த்து குழைத்து ஒரு வாரம் வரை இதனை காலை மாலை என இருவேளையும் 10 மி.லி சாப்பிடவேண்டும். மேலும் இந்த நாயுருவி இலையை அரைத்து பசைப்போல் ஆக்கி அதனுடன் சம அளவு எருமைமாட்டு பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை கலந்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டுவந்தாலும் இந்த இரத்த மூலநோய் சரியாகும்.

நாயுருவின் விதைகளை நிழலில் காயவைத்து அதனை இடித்து பொடியாக்கி துத்திக்கீரையுடன் சேர்த்து வதக்கி சாதத்துடன் கலந்து  சாப்பிட்டுவந்தால் எந்தவிதமான மூலநோயும் சரியாகும் என்று கூறப்படுகின்றது. மேலும் நாயுருவின் இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால் முகம் பொலிவுடன் காணப்படுகின்றது.

நெஞ்சு சளி வெளியேற:

நாயுருவின் இலையுடன் பருப்புசேர்த்து சமைத்து சாப்பிட்டுவந்தால் நெஞ்சில் உறைந்துள்ள சளியையும் வெளியேற்றிவிடும் என்று நம்பப்படுகின்றது. நாயுருவி வேர் பொடி சிட்டிகை அளவு, மிளகுத்தூள் சிட்டிகை அளவு அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டுவந்தால் நாள்பட்ட இருமலும் சரியாகும் என்று நம்பப்படுகின்றது.

இதய ஆரோக்கியம் மேம்பட:

நாயுருவை உட்கொண்டால் கெட்ட கொழுப்பு  குறையும். மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

சரும ஆரோக்கியம் மேம்பட:

நாயுருவி சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதில் உள்ள நச்சு நீக்கம் பலவகையான தோல்நோய் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

சர்க்கரையை நோயை கட்டுக்குள் வைக்க:

சர்க்கரையை நோயை கட்டுப்படுத்தும் தன்மை நாயுருவி செடிக்கு உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இதன் சாற்றை உட்கொண்டு வந்தால் சர்க்கரையை நோய் கட்டுக்குள் வரும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்

 

Advertisement