Neem Flower Benefits
இன்றைய ஆரோக்கியம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அனைவருமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்காக நாம் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
நாம் வாழும் இந்த அவசர உலகில் சத்தான உணவுகள் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. சத்தான உணவுகளுக்கு பதிலாக துரித உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றோம். அந்த வகையில் இன்று வேப்பம்பூவின் நன்மைகள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
யாருக்கும் தெரியாத வேப்பிலையின் நன்மைகள் உங்களுக்கு தெரிய வேண்டுமா.? |
வேப்பம் பூவின் பயன்கள்:
வேப்பமரத்தின் இலை, வேர், பட்டை, காய், பழம் மற்றும் பூ என்று அனைத்து பாகங்களும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் வேப்பமரத்தை பாதுகாத்து வளர்த்து வந்தார்கள்.
வேப்பமரம் இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளதால் தான் அது “கிராமத்தின் மருந்தகம்” என்று அழைக்கப்படுகிறது. அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி வேப்பமரத்தின் ஒவ்வொரு பாகங்களுக்கும் உண்டு. அதுபோல வேப்பம்பூவில் இருக்கும் நன்மைகளை பற்றி இங்கு பார்ப்போம்.
நிலவேம்பு பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
♦ ஏப்பம் அதிகமாக வருவது, பசியின்மை மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று சாப்பிட்டால் அது சரியாகிவிடும்.
♦ ஐந்து கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. தண்ணீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
♦ வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் குமட்டல், வாந்தி மயக்கம் மற்றும் குடல் புழுக்கள் போன்றவை குணமாகும். மேலும் இது பசி உணர்வை தூண்டும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க உடலில் உள்ள பித்தம் நீங்கும்.
♦ வேப்பம்பூ வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
♦ கொதிக்க வைத்த சூடான நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி மற்றும் தலையில் நீர் கோர்த்தல் போன்றவை நீங்கும்.
♦ வேப்பம் பூவை தேனீர் செய்து குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |