நெல்லிக்காய் எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?

Advertisement

நெல்லிக்காய் சாப்பிடும் முறை..!

வணக்கம் நண்பர்களே.. இயற்கை நமக்கு அளித்த மிக பெரிய வரப்பிரசாதம் என்று என்று நெல்லிக்காயை சொல்லலாம். நெளிகையில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களை பெறலாம். 50 வயதில் கூட நீங்கள் இளமையான தோற்றத்தை பெற வேண்டும் என்றால் தினமும் ஓரு நெல்லிக்காயை தவறாமல் சாப்பிடுங்கள். உடலுக்கு அவ்வளது நன்மை கிடைக்கும். நெல்லிக்காயை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. இருப்பினும் இரவு நேரத்தில் நெல்லிக்காயை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். சரி வாங்க நெல்லிக்காய் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் எப்போது சாப்பிட வேண்டும்?

இதயம் பலம் பெரும்:

நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வுகளில் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சீராக வைக்கிறது. மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக் கிறது.  ஆகவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவதினால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை குறை:

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

குளிர் காலத்தில் ஏற்படும் சளி இருமல் குணமாக:

பொதுவாக குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். கடுமையான குளிர் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நெல்லிக்காய் குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

நெல்லிக்காய் எப்போது சாப்பிட வேண்டும்?

தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவத்தினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். எலும்புகள் வலுப்பெறும், பித்தப்பைக் கற்கள் கரையும், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும், உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும், தங்கள் கண் பார்வை கூர்மையாகும், குறிப்பாக முதுமையைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கும்.

குழந்தைகளுக்கு பெரிய நெல்லிக்காயை எப்படிக் கொடுக்கலாம்?

குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி’ கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிகமாகச் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா?

வைட்டமின் `சி’ நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால், அதிகப்படியானதை உடம்பால் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. தேவையானதை எடுத்துக்கொண்டு மீதத்தை உடல் வெளியேற்றிவிடும். நெல்லிக்காய் அதிகமாகச் சாப்பிட்டால், ஒரு சிலருக்கு வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மற்றபடி பெரிதாக வேறு எந்தப் பிரச்னையும் வராது.

நெல்லிக்காயை யாரெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது?

நெல்லிக்காய் ஆரோக்கியமானது, ஆனால் சில சிறப்பு நேரத்தில் இந்த பழத்தின் அமில தன்மை காரணமாக அதை தவிர்ப்பது நல்லது. அறுவை சிகிச்சை செய்த நபர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

சக்கரை நோயாளிகளின் கவனத்திற்கு:

நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்சனைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிடலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement