உடல் எடை குறைக்க சாப்பிட வேண்டியவை
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக கருப்பாக இருப்பவர்களுக்கும் உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும் ஒரே கவலை தான் கருப்பாக இருப்பவர்களுக்கு வெள்ளை நிறமாக மாறவேண்டும், அதேபோல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது மட்டும் தான் யோசனையாக இருக்கும். சிலர் சிவப்பாக மாறவேண்டும் முகம் பொலிவு பெற வேண்டும் என நிறைய அழகு குறிப்புகளை தெரிந்துகொள்ள விரும்புவார்கள் அப்படி உங்களுக்கு அழகு குறிப்பு பற்றிய ஐடியாக்களை தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉👉 இயற்கை அழகு குறிப்புகள்
அதேபோல் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் நிறைய விதமான ஐடியாக்களை செய்து இருப்பீர்கள். ஆனால் நீங்கள் செய்த விஷயத்தை போல் எதுவும் இல்லாமல் மிகவும் எளிமையாக உங்கள் எடையை குறைக்க முடியும் வெறும் 5 ரூபாயில் உடல் எடையை குறைக்க முடியும் வாங்க அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்..!
உடல் எடையை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்:
வெயில் காலம் வந்து விட்டாலே நெல்லிக்காய் வெள்ளரிக்காய் போன்றவைகள் விற்பதை நாம் பார்த்திருப்போம் அல்லவா. அதனை விற்பதை பார்த்து விட்டால் வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு அதனை வாங்கி கொடுப்பார்கள். அதேபோல் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 2 ஆப்பிள்க்கு சமம் என்று சொல்லி சாப்பிட சொல்வார்கள்..!
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!
ஏனென்றால் அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது. அதில் முக்கியமானது வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கும், அதேபோல் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், டானின்கள், பாலிபினால்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஹைப்போலி பிடெமிக் சத்துக்கள் உள்ளது.
இந்த அனைத்து சத்துக்களும் உடல் எடையை குறைக்க வழி செய்வதால் நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.
நெல்லிக்காயில் உப்பு, மிளகாய் தூள் வைத்து மட்டுமே சாப்பிட்டிருப்போம் அதேபோல் ஊறுகாய் போல் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்படி சாப்பிடுவதால் இதனுடைய சத்து மிகவும் குறைவாகத்தான் உடலுக்கு சேரும் ஆகவே நெல்லிக்காயை ஜூஸ் செய்து குடிக்கலாம். இதனால் உடல் எடையை குறைக்க முடியும்.இப்படி செய்து சாப்பிடும் போது உங்களுக்கு நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் அதிகமாகி இருக்கும். அது கொஞ்சம் கசப்பாகவும் இருக்கும் புளிப்பாகவும் இருக்கும் அல்லவா அதனால் அதில் சிறிது இனிப்பு சுவைக்காக தேன் கலந்து சாப்பிடலாம். அது இன்னும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இந்த நெல்லிக்காய் 3 முதல் 5 ரூபாய் தான் இருக்கும் இரண்டு வாங்கி ஜூஸ் செய்து குடித்தால் உடல் எடையை குறைக்க முடியும். இதனை தினமும் குடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிக்கலாம் அது நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 இந்த டிப்ஸ் மட்டும் போதும் 10 நாட்களில் உடல் எடை குறையும்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |