உங்கள் குழந்தை எடை அதிகமாக வேண்டுமா அதற்கு ஏற்ற மருந்தாக உள்ளது இந்த நேந்திர வாழைப்பழம்

Advertisement

நேந்திர வாழைப்பழம் பயன்கள்

பொதுவாக நாம் தினசரி ஒரு பழங்களை சாப்பிட்டுவருவது உண்டு அதில் அதிகளவு நாம் எடுத்துக்கொள்ளும் பழம் வாழைப்பழம். வாழைப்பழம் என்றால் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பு அதுபோல் சில பழத்திற்கு நோயை தடுக்கக்கும் மருந்தாகவும் உள்ளது. அதேபோல் சில பழங்களில் அதிகபட்சமான சத்துக்கள் அடங்கியுள்ளது. சத்துள்ள பழங்களில் ஒன்றானது தான் இந்த நேந்திரபழம் இந்த பழத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை பார்ப்போம் வாங்க.

பச்சை வாழைப்பழம் நன்மைகள்

நேந்திர வாழைப்பழம் பயன்கள்:

இந்த நேந்திர பழமானது கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தில் மிகவும் சிறப்பு மிக்கது. இந்த பழத்தை ஏத்தப்பழம் என்றும் கூறப்படுகிறது. மற்ற வாழைப்பழங்களை விட சற்று பெரிதாகவும் இருக்கும். இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது அதனை பற்றி தெளிவாக காண்போம்.

அதிகம் உடலில் சூட உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி பெறும்.

நேந்திர வாழைப்பழம் பயன்கள்

அதேபோன்று மிகவும் சோர்வுடன் இருப்பது போலும் இரத்தம் அதிகம் இல்லாமல் இருந்தால் இந்த பழத்தை சாப்பிட்டுவர இரத்தம் அதிகமாகும், இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டுவர நல்ல இரத்தம் விருத்தி அடையும்.

காச நோய் உள்ளவர்கள் தினமும் இரவு முட்டையுடன் இந்த நேத்திர பழத்தை சாப்பிட்டுவர காச நோய் நீங்கும்.
நேந்திர வாழைப்பழம் பயன்கள் அல்சர் உள்ளவர்கள் தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டு வர குடலில் உள்ள பூண் ஆறவைத்து, குடலை மென்மையாக ஆக்கும். பின்பு உங்களுக்கு நல்ல பசியை தூண்டும்.

நேந்திர வாழைப்பழம் பயன்கள்

இந்த பழத்தில் அதிகம் பொட்டாசியம் இருப்பதால் தினமும் காலையில் சாப்பிட்டு ஒரு  மணி நேரம் கழித்து வாழைப்பழத்தை சாப்பிட்டுவர இதயத்திற்கு மிகவும் நல்லது. அதே போல் கெட்ட கொழுப்புகளையும் குறைக்கும்.

மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இந்த பழம் மிகவும் உதவியாக இருக்கும். உடல் எடை அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள். தினமும் நேந்திர பழத்தை வேகவைத்து சாப்பிட்டுவர உடல் எடை அதிகமாகும்.

இந்த பிரச்சனையானது அனைவருக்கும் இருக்கும் அது செரிமானத்திற்கும் மலச்சிக்கலையும் குணமாக்கும்.

நேந்திர வாழைப்பழம் பயன்கள்

நேந்திர பழத்தை சாப்பிட்டுவந்தால் சருமத்தை பொலிவாக்கும் அதேபோல் நரம்பு தளர்ச்சியை குணமாக்கும்.

இந்த பழத்தை தினமும் இரவு நேரம் சாப்பிட்டுவர நல்ல தூக்கம் வரும், குழந்தைகளுக்கு இந்த பழம் முக்கியமான உணவாகவும் உள்ளது.

குழந்தைகள் எடை கமியாக இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு இந்த பழத்தை கொடுத்துவதால் நல்ல இரத்தையும் பெற்று நல்ல எடையையும் தரும்.

நேந்திர வாழைப்பழம் பயன்கள்

கேரளா மாநிலத்தில் விருந்துகளில் பிரதான உணவாகவும் திகழ்கிறது. அங்கு இந்த பழத்தை பொடியாக மாற்றி அதனை கஞ்சியாக வைத்து குடிக்கிறார்கள், அதேபோல் இந்த பொடியை குழந்தைகளுக்கு 6 மாத காலத்திலிருந்து கொடுகிறார்கள்.

இந்த பொடியில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது மேலும் இதில் உள்ள நார்சத்து குழந்தையின் செரிமானத்திற்கும் உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement