வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நெத்திலி கருவாடு பயன்கள்

Updated On: April 19, 2025 1:34 PM
Follow Us:
nethili karuvadu benefits in tamil
---Advertisement---
Advertisement

நெத்திலி கருவாடு பயன்கள்

சில பேர் கருவாட்டை விரும்புவார்கள். சில பேருக்கு கருவாடு வாசனையே பிடிக்காது. வீட்டில் கருவாடு செய்தாலே ஓடி விடுவார்கள். ஏனென்றால் இடஙக வாசனை கூட பிடிக்காதவர்களுக்கு ஓமட்டலை ஏற்படுத்தும். ஆனால் கருவாட்டில் பல நன்மைகள் இருக்கிறது. அதனை தெரிந்து கொண்டால் பிடிக்காதவர்கள் கூட கருவாட்டை விரும்பி சாப்பிடுவார்கள். கருவாட்டில் நிறய வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு பயனை தர கூடியதாக இருக்கிறது. அதனால் நீங்கள்  எல்லா வகை கருவாட்டிலும் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொண்டு சாப்பிடுங்ககள். இந்த பதிவில் நெத்திலி கருவாட்டு உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

நெத்திலி கருவாடு நன்மைகள்:

நெத்திலி கருவாடு பயன்கள்

நெத்திலி கருவாட்டில் புரதம் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.

கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உதவியாக இருக்கிறது. பற்களுக்கும் நன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க செய்கிறது. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கருவாட்டை உணவில் சேர்த்து கொள்ளலாம். அனால் முக்கியமாக உடல் எடையை குறைக்கும் என்பதற்காக பொறித்து சாப்பிட கூடாது. ஏனென்றால் எண்ணெயில் பொரித்து எடுப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்யும். அதனால் இதனை குழம்பு வைத்து சாப்பிடலாம்.

உங்களுடைய உணவில் நெத்திலி மீனை சேர்த்து கொள்வதன் மூலம் சரும பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது. கண் பார்வை திறனை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

இதில் செலினியம் போன்ற சத்துக்களில் ஆனது அதிகமாக நிறைந்திருப்பதால் புற்றுநோய் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, குழந்தை பிறந்த பிறகும் சரி நெத்திலி மீனை எடுத்து கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஆனது அதிகமாக சுரப்பதற்கு உதவுகிறது.

நெத்திலி கருவாடு தீமைகள்:

ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சைனஸ் மற்றும் ஆஸ்துமா இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி தான் நெத்திலி கருவாட்டை சாப்பிட வேண்டும்.

முக்கியமாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த அன்று நெத்திலி கருவாட்டை சாப்பிட கூடாது.

உடல் அரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் நெத்திலி கருவாடு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நெத்திலி கருவாடு சுத்தம் செய்யும் முறை:

நெத்திலி கருவாட்டில் குழம்பு மற்றும் வறுவல் இரண்டும் செய்யலாம். முதலில் நெத்திலியைநன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு வெந்நீர் வைத்து நெத்திலி கருவாட்டை 5 நிமிடத்திற்கு அதில் ஊற வைக்க வேண்டும். இதன் மூலம் நெத்திலியில் உள்ள மண் மற்றும் தேவையில்லாத கழிவுகள் நீங்கி விடும்.

இதில் இருக்கும் தலை மற்றும் தேவையில்லை உறுப்புகளை கைகளால் கிள்ளி விட வேண்டும். அதன் பிறகு இதனது சுத்தமான தண்ணீரில் 3 முறை கழுவி விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் இதில் என்ன செய்கிறீர்களோ அதனை செய்ய ஆரம்பிக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now