நெத்திலி மீன் பயன்கள் | Nethili Meen Payangal

Advertisement

நெத்திலி மீன் நன்மைகள் | Nethili Fish Benefits in Tamil

Nethili Fish Benefits in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் நெத்திலி மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமது உடலிற்கு கிடைக்கிறது என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! மீன் வகைகளில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது மத்தி மீனும், நெத்திலி மீனும் தான். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் மீன். ஒவ்வொரு மீன் வகைகளிலும் எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலோனோர் இறைச்சி வகை உணவுகளையே பெரிதும் விரும்பி உண்ணுவார்கள். இறைச்சியை விட மீன் வகை உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். சரி இப்போது நெத்திலி மீன் சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம்..!

சால்மன் மீன் நன்மைகள்

இதய சம்பந்த நோயை தடுக்கும்:

Nethili Fish Benefits in Tamil

பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி என்ற அமிலம் நெத்திலி மீனில் அதிகமாக உள்ளது. இந்த அமிலமானது இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். நெத்திலி மீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் இருக்கும் தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் அனைத்தும் குறைந்து இதய நோய் வராமல் தடுக்கும்.

சரும ஆரோக்கியத்தினை பாதுகாக்கும்:

Nethili Fish Benefits in Tamil

நெத்திலி மீனில் ஃபேட்டி அமிலம், வைட்டமின் ஈ, செலினியம் போன்ற சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. சரும பிரச்சனையை தவிர்ப்பதற்கு சாப்பிடும் உணவுகளில் அதிகமாக நெத்திலி மீனை சேர்த்துக்கொண்டால் சருமம் சார்ந்த எந்த வித பிரச்சனைகளும் வராமலும், சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்

பற்கள் மற்றும் எலும்புகள் பலமாக இருக்க:

 Nethili Fish Benefits in Tamil

பற்கள் மற்றும் எலும்புகளுக்கு தேவையான அதிகமான கால்சியம் சத்துக்கள் நெத்திலி மீனில் இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் நெத்திலி மீனில் உள்ளது. எலும்பு மற்றும் பற்கள் பலமாக இருக்க நெத்திலி மீனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 

கண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க:

 Nethili Fish Benefits in Tamil

நெத்திலி மீனில் கண்களை பாதுகாக்கக்கூடிய வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. கண்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட நெத்திலி மீனை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிட்டு வர கண் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். 

உடல் எடையை கட்டுக்குள் வைக்க:

 Nethili Fish Benefits in Tamil

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் சத்து அதிகம். எனவே உடல் எடை அதிகம் உள்ளவர்கள் நெத்திலி மீனை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement