நிலாவரை பொடி பயன்கள் | Nilavarai Powder Benefits in Tamil

Advertisement

நிலாவாரை சூரணம் பயன்கள் | Nilavarai Sooranam Uses in Tamil | Nilavarai Podi Benefits in Tamil

ஆங்கில மருந்து வருவதற்கு முன்பு நம் முன்னோர்கள் உடல் நலத்தை பாதுகாப்பதற்கு பெரும்பாலும் மூலிகைகளை தான் பயன்படுத்தி வந்தார்கள். சில மூலிகைகள் நாம் இருக்கும் இடத்தில் வளர்ந்தாலும் அதை பற்றிய மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை. அப்படி ஒரு மூலிகையில் ஒன்று தான் இந்த நிலாவரை. நிலாவரையின் இலைகள் கசப்பாக இருக்கும் ஆனால் இதில் இருக்கும் மருத்துவ பயன்கள் எண்ணற்றவை. இந்த தொகுப்பில் நிலாவரை பொடி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நிலாவாரை பொடியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து இருக்கிறது. முக்கியமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது. எனவே, உடல் எடை அதிககமாக உள்ளவர்கள் நிலாவரை பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

Nilavarai Powder Benefits in Tamil:

வாயு தொல்லை நீங்க:

Nilavarai Powder Benefits in Tamil

  • Nilavarai Powder Benefits in Tamil: ஒரு சிலருக்கு சாப்பிட்ட உணவுகள் எளிதில் ஜீரணமடையாமல் வாயு தொல்லை, மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் ஏற்படும். அதனை சரி செய்வதற்கு நிலாவரை இலையுடன் சிறிதளவு வெந்தய கீரை மற்றும் ஓமத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் இதை இரவு உறங்குவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை மற்றும் செரிமானம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க:

Nilavarai Powder Benefits in Tamil

  • Nilavarai Sooranam Uses in Tamil: உயிரணுக்களின் எண்ணிக்கை வலுவிழந்து இருப்பவர்கள் நிலாவரை பொடியுடன் ஆட்டுப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாதுக்கள் பலம் பெரும்.
  • நிலாவரை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, ஆற்றல் மேம்படும்.

இளநரை:

Nilavarai Podi in Tamil

  • Nilavarai Podi in Tamil: நம்முடைய உணவு மற்றும் பழக்கவழக்கம் காரணமாக இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு தலைமுடி வெள்ளையாக மாறிவிடும்.
  • நிலாவரை இலையை அரைத்து பேஸ்ட் போல செய்து தலையில் தடவி வந்தால் இளநரை விரைவில் சரியாகும். மேலும் முடி உதிர்வதை தடுக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

மூட்டுவலி:

Nilavarai Podi Uses in Tamil

  • Nilavarai Powder Benefits in Tamil: வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகளும் அதிகரிக்க ஆரம்பித்து விடும். அதில் முக்கியமான ஒன்று மூட்டு வலி. வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறாமல் இருப்பதால் தான் கை, கால், மூட்டுகளில் வலி ஏற்படுகிறது.
  • இதனை குணப்படுத்துவதற்கு வெந்நீரில் நிலாவரை பொடியை சேர்த்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வரலாம்.

நிலாவரை பொடி மலச்சிக்கல்:

Nilavarai Sooranam Uses in Tamil

  • Nilavarai Podi Uses in Tamil: நிலாவரை பொடியை பாலில் கலந்து சுண்டக்காய்ச்சி அதில் பனங்கற்கண்டு சேர்த்து இரவு உறங்கும் முன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமாகும்.

உடல் சுறுசுறுப்பாக இருக்க:

நிலாவரை பொடி பயன்கள்

  • நிலாவரை பொடி பயன்கள்: அதிக வேலை மற்றும் கவலை காரணமாக ஒரு சிலர் எப்பொழுதும் சோர்வுடன் காணப்படுவார்கள்.
  • உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவதற்கு நிலாவரை பொடியுடன், சுக்கு, கிராம்பு பொடி மற்றும் ரோஜா இதழ்கள் சேர்த்து 1 லிட்டர் நீரில் கால் லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வரலாம்.
  • மேலும் இது வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் உதவியாக இருக்கும்.

பக்கவாதம் நீங்க:

Nilavarai Podi in Tamil

  • Nilavarai Podi in Tamil: பக்கவாதம் உள்ளவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் நிலாவரை பொடி, வேலிப்பருத்தி பொடி, முடக்கத்தான் பொடி சேர்த்து கால் லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி தினமும் காலை குடித்து வந்தால் பக்கவாதம் விரைவில் குணமாகும்.

விஷக்கடிக்கு:

Nilavarai Podi in Tamil

  • விஷ பூச்சிகளான வண்டு, தேள், பாம்பு போன்றவை கடித்தால் வேப்பமர பட்டை சாறுடன், நிலாவரை பொடியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் விஷம் நீங்கி விடும்.

நிலாவரை பொடி செய்முறை

நிலாவரை பொடி

தேவையான பொருட்கள்:

  1. நிலாவரை – 100 கிராம்
  2. சோம்பு – 100 கிராம்
  3. கற்கண்டு – 100 கிராம்
  4. கொத்தமல்லி – 100 கிராம்

செய்முறை:

நிலாவரை 100 கிராம், சோம்பு 100 கிராம், கற்கண்டு 100 கிராம், கொத்தமல்லி 100 கிராம் இவற்றை சுத்தம் செய்து நிழலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.

நிலாவரை பொடி சாப்பிடும் முறை:

5 கிராம் பொடியை வெந்நீரில் கலந்தோ (அ) கசாயமாக கொதிக்க வைத்தோ இரவு சாப்பிடுவதற்கு பின் பருக வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனையின் படி இதனை எடுத்து கொள்ள வேண்டும்.

தான்றிக்காய் பொடி பயன்கள்
முருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement