நிலாவரை பொடி தீமைகள்

Advertisement

நிலாவரை தீமைகள்

ஆங்கில மருந்து வருவதற்கு முன்பு நம் முன்னோர்கள் உடல் நலத்தை பாதுகாப்பதற்கு பெரும்பாலும் மூலிகைகளை தான் பயன்படுத்தி வந்தார்கள். சில மூலிகைகள் நாம் இருக்கும் இடத்தில் வளர்ந்தாலும் அதை பற்றிய மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை. அப்படி ஒரு மூலிகையில் ஒன்று தான் இந்த நிலாவரை. நிலாவரையின் இலைகள் கசப்பாக இருக்கும் ஆனால் இதில் இருக்கும் மருத்துவ பயன்கள் எண்ணற்றவை ஆக இருக்கிறது. அதனால் இந்த மூலிகைகளை எடுத்து கொள்கிறார்கள். எந்த மூலிகையாக இருந்தாலும் சரி அதில் உள்ள நன்மைகள் போலவே தீமைகளும் இருக்கின்றது. அதனால் நீங்கள் எடுத்து கொள்கின்ற மூலிகைகளில் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் நிலாவரை தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

மூல நோய் உள்ளவர்கள்:

இரைப்பை குடல் பிரச்சனை, வயிற்று வலி, வயிற்று போக்கு, வயிற்று வீக்கம், மூல நோய் பிரச்சனை உள்ளவர்கள் நிலாவரையை எடுத்து கொள்ள கூடாது.

கர்ப்பிணி பெண்கள்:

நிலாவரை பொடி தீமைகள்

கர்ப்பிணி பெண்கள் இந்த நிலாவரை மூலிகையை எடுத்து கொள்ள கூடாது, ஏனென்றால் அவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் வயிற்று போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இந்த மூலிகையை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்:

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை சிறிய அளவில் எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்து கொள்ளும் உணவானது தாய்ப்பாலுடன் இணைகிறது. அதனால் அவ்வப்போது நீங்கள் சாப்பிடும் உணவுகளை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். நீங்கள் நிலாவரை மூலிகையை அளவாக எடுத்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.

கல்லீரல் பிரச்சனை:

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்  இந்த மூலிகையை அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.ஒருவேளை நீங்கள் அதிகமாக இந்த மூலிகையை எடுத்து கொண்டால் உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

நிலாவரை பொடி பயன்கள்

வயிற்று பிடிப்பு:

நிலாவரை தீமைகள்

வயிற்று பிடிப்பு, வயிற்றுபோக்கு, வயிற்று அஅசெளகரியம் போன்ற பிரச்சனைகளை இந்த மூலிகை ஏற்படுத்தும்.

பொட்டாசியம் அளவு:

நிலாவரை மூலிகை ஆனது பொட்டாசியத்தின் அளவை குறைக்க செய்யும். அதனால் குறைந்த பொட்டாசியம் அளவுகள் டிகோக்சின் பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

மாத்திரை எடுத்து கொள்பவர்கள்:

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனுடன் இந்த மூலிகையையும் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. அதனால் இந்த மூலிகையை எடுத்து கொள்ள நினைத்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil

 

 

Advertisement