நூக்கல் தீமைகள், யாரெல்லாம் நூக்கல் சாப்பிட கூடாது?

Advertisement

நூக்கல் தீமைகள்

நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் நன்மைகள் எப்படி இருக்கிறதே அதே போல் தீமைகளும் இருக்கிறது. ஆனால் நாம் நன்மை மற்றும் தீமையை தெரிந்து கொள்ளாமல் எது ருசியாக இருக்கிறது என்பதை தான் பார்த்து சாப்பிடுகிறோம். அதுமட்டுமில்லமால் உணவில் நம்மை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அடிகனை அடிக்கடியும் உணவில் சேர்க்க கூடாது. ஏனென்றால் அமிர்தமாகவே இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாக மாறக்கூடும். நூக்கல் சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது, செரிமான சக்தியை மேம்படுத்துகிறது, குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதில் தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் நூக்கல் தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

நூக்கல் சாப்பிடுவதால் தீமைகள்:

இந்த நூக்களை அளவோடு சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே அளவுக்கு மிஞ்சினால் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

இந்த நூக்கலை அளவுக்கு அதிகமாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் வாயு அல்லது வயிற்றுபோக்கு பிரச்சனையை ஏற்படுத்த கூடும்.

இதில் உள்ள நார்ச்சத்து ஆனது சில நபர்களுக்கு வாயு பிரச்சனையை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது.

சில நபர்களுக்கு நூக்கல் ஆனது செரிமான பிரச்சனையை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது.

யாரெல்லாம் நூக்கல் சாப்பிட கூடாது:

நூக்கல் தீமைகள்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் நூக்கல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வாயு பிரச்சனை உள்ளவர்கள் நூக்கல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் நூக்கல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நூக்கல் சாப்பிடலாமா என்பதை மருத்துவ ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.

யாரெல்லாம் நூக்கல் சாப்பிடலாம்:

நூக்களில் குறைந்த கலோரி இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை எடுத்து கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நூக்கல் சிறந்த உணவாக இருக்கிறது.

நூக்கல் தாது, வைட்டமின் C மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அதனால் இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் இதனை எடுத்து கொள்ளலாம். மேலும் இரத்த சோகை பிரச்சனை வராமலும் பாதுகாக்க உதவும்.

நூல்கோல் நன்மைகள்

எப்படி நூக்கலை சாப்பிட வேண்டும்:

நூக்கல் அளவோடு எடுத்து கொள்வது சிறந்தது.

இதனை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்.

தேங்காய், இஞ்சி, மிளகு போன்றவை சேர்த்து நூக்கல் குழம்பாகச் செய்து சாப்பிட்டால், வாயுப்பிரச்சனைகள் குறையும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நூக்கல் எடுத்து கொள்ளலாம்:

நீங்கள் நூக்கலை சமைத்து சாப்பிடும் பொழுது 1/2 கப் அல்லது 1 கப் எடுத்து கொள்ளலாம்.

வாரத்தில் 2 முறையிலிருந்து 4 முறை வரைக்கும் எடுத்து கொள்ளலாம். இதனை தினமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips

 

 

Advertisement