அடிக்கடி கை கால் மறுத்து போக காரணம் என்ன..?
நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும்போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம். இதற்கு என்ன காரணம் என்றால் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது தான் காரணம். அதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால் இரத்த ஓட்டங்கள் தடைபடுவதன் காரணமாக இந்த Numbness Symptoms கால் மரத்துப்போதல்ன் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக மரத்து போகும் பிரச்சனை என்பது ஒரே இடத்தில அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை, இன்னும் பல காரணங்களும் இருக்கிறது. சரி வாருங்கள் மரத்து போவதற்கு இன்னும் என்னென்ன காரணங்கள் இருக்கின்றது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
அடிக்கடி கை, கால் மரத்து போவதன் காரணம்
கை, கால் மரத்துப்போதல் காரணம்:
- உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.
- அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.
- அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.
- அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
- மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
- உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
- இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.
- வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.
- அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது. எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.
- சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.
- குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.
- சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS |
கை, கால்கள் மரத்துப்போதல் பற்றிய VIDEO விளக்கம்
யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?
குறிப்பாக இந்த பிரச்சனை அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலைபார்ப்பவர்களுக்கு, அதிகமாக பாத்திரம் விளக்குபவர்களுக்கு, மணிக்கட்டுகளுக்கு அதிக வேலை தருபவர்களுக்கு, உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..! |
இந்த கை, கால் மரத்துப்போதல் பிரச்சனை உள்ளவர்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். அதேபோல் வைட்டமின் B12 குறைபாடுகள் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். மேலும் டிவி பார்ப்பவர்கள் சாய்வாக அமர்ந்து டிவி பார்ப்பதை தவிர்த்து கொண்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து டிவி பார்க்க வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் நிலைகளினால் கூட இந்தகை மரத்துப்போதல் (kai maruthu pothal) பிரச்சனை ஏற்படுகிறது.
குறிப்பு:
அடிக்கடி மரத்து போகுதல்(Numbness Symptoms) பிரச்சனை உள்ளவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து கொண்டு, கொஞ்சமாவது உடலுக்கு அசைவுகள் தரவேண்டும்.உடலில் அசைவுகள் இருந்தால் தான் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இல்லையெனில் இரத்த ஓட்டங்களில் தடைகள் ஏற்பட்டு இந்த மாதிரி கை, கால் மரத்து போகும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |