Oil Bath Benefits in Tamil
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தான் பார்க்க போகிறோம். எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் தமிழ் மக்களின் பாரம்பரிய வழக்கம் ஆகும். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் மக்கள் குறைவாகவே இருக்கிறார்கள். எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நம் பாரம்பரிய வழக்கம் மட்டும் இல்லாமல் அது சிறந்த மருத்துவமாகவும் விளங்குகிறது. இந்த பதிவின் மூலம் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளாலாம் வாங்க.
இது போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது ஏன் தெரியுமா..? |
எண்ணெய் தேய்த்து குளிப்பது எதற்காக:
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. நாம் வாரம் ஒரு முறையாவது கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
உடல் சூட்டை தணிக்க:
நாம் வாரம் 1 முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை தணிக்கிறது. நீர்கடுப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் நம்மை பாதுகாக்கிறது. உடலில் இருக்கக் கூடிய அதிகமான உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது.
மேலும் உடலில் ஏற்பட கூடிய தோல் வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தருகிறது. அதிகப்படியான உடல் சோர்வை போக்குகிறது.
கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மேலும், நமது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
நாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் நோய்கள் நம்மை நெருங்கும் வாய்ப்பு குறையும்.
இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. சுவாசம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் இதனால் மூச்சு இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கிறது.
சரும நோய்கள் வராமல் தடுக்க:
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சருமம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
சருமத்தில் ஏற்பட கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், தேமல், சரும வறட்சி மற்றும் முகச் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
இரத்த ஓட்டம் சீராக:
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இரத்த ஓட்டம் சீராகும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |