வீட்டில் ஊதுபத்தி உபயோகிக்கும் பழக்கம்
வணக்கம் ஆரோக்கிய நண்பர்களே..! அனைவருடைய வீட்டிலும் இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி வழிபடும் போது ஊதுபத்தி மற்றும் சூடம் ஏற்றுவது, சாம்பிராணி போடுவது இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
அப்படி நீங்கள் ஏற்றும் ஊதுபத்தி இறைவனை வழிபடுவதற்கு மட்டும் இல்லாமல் உங்களை ஆரோக்கியமாக வைப்பதற்கும் உதவுகிறது. அத்தகைய ஊதுபத்தியில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இன்றைய பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..!
ஊதுபத்தி ஏற்றுவதில் வரும் நன்மைகள்:
வீட்டில் இறைவனை வழிபாடும் போது ஊதுபத்தி ஏற்றுவதில் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி கீழே கொடுக்கப்படுள்ளன.
கிருமி நாசினியை வெளியேற்றுகிறது:
ஊதுபத்தி இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு கொண்டது. அதனால் உங்களை சுற்றி உள்ள கிருமி நாசினிகளை வெளியேற்றி சுற்று புறத்தை தூய்மையாக வைத்து நோய் வராமல் பாதுகாக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் ஊதுபத்தி போஸ்வெல்லிக் அமிலம் அல்லது தூபப்பொருள் என்ற அழற்சி தன்மையும் கொண்டிருப்பதால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து உடலை ஆரோக்கியமாக வைக்கப்பதற்கு உதவுகிறது.
தலைவலி குணமாக:
உங்களுக்கு தலை வலி, ஒற்றை தலைவலி, மன அழுத்தம் இதுபோன்ற சூழலில் நீங்கள் இருக்கும் போது ஒரு சில ஊதுபத்தியின் வாசனை உங்களை இதிலிருந்து விடுவிக்க செய்யும். அதனால் உங்கள் வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவது உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
பதட்டம் குறைய:
ஒரு சிலர் வீட்டில் பூஜை அறை இல்லாமல் வீட்டில் உள்ள மற்ற அறைகளிலும் ஊதுபத்தி ஏற்றி வைப்பார்கள். அப்படி ஊதுபத்தி ஏற்றி வைக்கும் போது உங்களுக்கு பதட்டம், மனக்குழப்பம், கவலை இது மாதிரி பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து உங்களை தளர்வடைய செய்து அதிக ஆற்றலுடன் இருக்க செய்யும்.
இரவில் நல்ல தூக்கம்:
இரவில் தூங்குவதற்கு முன்பு படுக்கை அறையில் ஊதுபத்தி சிலர் ஏற்றி வைப்பார்கள். ஏனென்றால் அந்த ஊதுபத்தில் உங்களை தூங்க வைக்கும் வலுவான நறுமணங்கள் நிறைந்து இருக்கின்றன. அப்படி செய்தால் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும் என்று சொல்லப்படுகிறது.
சுற்றுப்புறத் தூய்மை:
வீட்டில் ஊதுபத்திகள் ஏற்றுவதன் மூலம் உங்களுடைய வீட்டின் சுற்று புறத்தை தூய்மைப்படுத்தி வீட்டில் உள்ள தீய சக்திகளை நீக்கி ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கும் ஆற்றலை கொடுக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |