தைராய்டு குணமாக எளிய வழிகள் (Thyroid Problem)
தைராய்டு முற்றிலும் குணமாக உணவுகள்:- இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு என்பது உலக வியாதியாக மாறி வருகிறது. குறிப்பாக பெண்களை அதிகளவில் தைராய்டு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தாக்குகிறது. எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன், உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு. அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் என்று அடுக்கிக் கொண்டே போகும் பலரின் புலம்பலுகளை கேட்டிருப்போம்.
ஆனால், உண்மையிலியே இந்த அறிகுறி எல்லாமே தைராய்டு நோயின் அறிகுறி தான் என்று சொல்லி விடமுடியாது. அதே சமயத்தில் நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தைராய்டு பிரச்சனையை (Thyroid Problem) எப்படி விரட்டுவது என்றால், வெறும் மாத்திரை மட்டும் பற்றாது. அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும். அப்படியான உணவுகளில் தைராய்டு (Thyroid Problem) இருப்பவர்கள் கட்டாயம் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.
அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?
தைராய்டு முற்றிலும் குணமாக 10 இயற்கை உணவு முறைகள்
1) ஸ்ட்ராபெர்ரி :
உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் (Thyroid Problem) இருந்து குணமாகலாம்.
ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது. எனவே தைராய்டு குணமாக நினைப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதிகளவு உண்டு வந்தால் கட்டாயம் தைராய்டு பிரச்சனை (Thyroid Problem) சரியாகிவிடும்.
2) காளான் :
செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.காளானை அதிகளவு உண்டுவர தைராய்டு பிரச்சனை (Thyroid Problem) முற்றிலும் சரியாகிவிடும். அதனால் ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது காளான் சாப்பிடுவது .
3) பூண்டு :
செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்த உணவு பொருளாக இருக்கிறது. எனவே தைராய்டு பிரச்சனை குணமாக (Thyroid Problem) பூண்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. மேலும் நீங்கள் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பூண்டு சேர்த்து சமைப்பது நல்லது.
4) பசலைக் கீரை :
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கீரை வகைகளில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிட்டால், தைராய்டு குணமாகும். மேலும் இது தைராய்டு பிரச்சனைக்கு சிறந்த உணவாக விளங்குகிறது.
5) மாட்டிறைச்சி :
மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது. இறைச்சி உணவுகளை அதிகம் விரும்புபவர்கள் கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை உட்கொள்ளுங்கள்.
தைராய்டு குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள் |
6) முட்டை :
முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் (Thyroid Problem) ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது. அதனால் முட்டை மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது நல்லது.
7) தானியங்கள் :
தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும். இதனால் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தானிய வகைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
8) தைராய்டு குணமாக ப்ராக்கோலி :
இந்த ப்ராக்கோலியில் அதிக சத்துக்கள் இருக்கிறது. அதனால் தினமும் ப்ராக்கோலியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.
9) மாட்டின் கல்லீரல் :
மாட்டிறைச்சி என்றாலே சிலர் அறுவெறுப்பாக நினைப்பார்கள். ஆனால் அத்தகைய மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம். மேலும் தைராய்டு பாதிப்புகளை சரி செய்ய முடியும்.
10) தைராய்டு குணமாக தக்காளி :
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டு பிரச்சனையால் (Thyroid Problem) பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் அன்றாட உணவுகளில் தக்காளி சேர்த்து கொள்வது நல்லது.
கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் 12 நன்மைகள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |