படர்தாமரை குணமாக என்ன செய்ய வேண்டும்?

Advertisement

படர்தாமரை நீங்க பாட்டி வைத்தியம்..! Padarthamarai Natural Treatment in Tamil

படர்தாமரை என்பது பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான தோல் நோய் மற்றும் தொற்று நோய் என்று சொல்லலாம். படர்தாமரை என்று சொல்லப்படும் இந்த தோல் நோயை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விட்டால் பின் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் இந்த பிரச்சனையை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் பிறகு சருமம் தடிப்பு மற்றும் அரிப்பு என்று பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

சரி இந்த படர்தாமரை ஏன் வருகிறது, இந்த படர்தாமரை குணமாக என்ன செய்ய வேண்டும்? படர்தாமரை குணமாக இயற்கை மருந்து என்ன இருக்கிறது போன்ற தகவல்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

படர்தாமரை ஏன் வருகிறது?

ஃபங்கஸ்’ (Fungus) என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதாவது அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள சருமங்களில் இந்த தோல் நோய் உண்டாகுகின்றது. அதாவது உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்கு, உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கு, உடலில் அதிகம் வியர்வை வருபவர்களுக்கு என்று பல காரணங்களினால் இந்த ஃபங்கஸ் என்று சொல்லப்படும் படர்தாமரை பிரச்சனை ஏற்படுகின்றது.

படர்தாமரை குணமாக என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக இந்த பூஞ்சைகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் வசிக்கக்கூடியவை என்பதினால் நமது உடலை நாமே தான் சுத்தமாக வைத்துக்கொள்ள  வேண்டும். தினமும் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். குளித்த உடன் உடலை ஈரம் இல்லாதவாறு சுத்தமாக துடைக்க வேண்டும். ஈரம் இல்லாத நன்கு காய்ந்த ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். படர் தாமரை பரவும் இடங்கள் என்று பார்த்தால் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு, கால் இடுக்குகள், பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் ஏற்படும் என்பதினால் உடலில் இது போன்ற இடங்களில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சரி இந்த படர்தாமரை குணமாக பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

படர்தாமரை குணமாக பாட்டி வைத்தியம்..! Padarthamarai Home Remedy in Tamil..!

மிளகு:-

மிளகு பொதுவாக பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகிறது. அந்த வகையில் இந்த படர்தாமரை பிரச்சனைக்கு மிளகு ஒரு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. மிளகை நெய்யுடன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பின் இரவு உறங்குவதற்கு முன் இந்த பேஸ்ட்டினை படர்தாமரை அல்லது தோல் நோய் உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் மறுநாள் காலையில் சீயக்காய் தூள் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பிரச்சனை விரைவில் குணமாகும்.

படர்தாமரை குணமாக கை வைத்தியம்:

தோல் நோய்கள் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அதற்கான கை வைத்தியம் முறையை மேற்கொள்ளும் போது மிக எளிதாக குணப்படுத்தலாம். அதற்கான பாட்டி வைத்திய குறிப்புகளை இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.

  1. கருந்துளசி – இரண்டு கைப்பிடியளவு
  2. எலுமிச்சை சாறு – தேவையான அளவு
  3. சீயக்காய் – 10 
  4. கிழங்கு மஞ்சள் – 2
தேமல் மறைய என்ன செய்வது

செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக பேஸ்டு போல் அரைத்து கொள்ளுங்கள். பின் இதனை பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக அப்ளை செய்து இரண்டு மணி நேரம் காத்திருக்கவும். பிறகு 2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் விட்டு அந்த இடத்தில் சோப்பு பயன்படுத்தாமல் குளிக்க வேண்டும். இதனை இரவு நேரத்திலும் தடவி மறுநாள் காலை குளிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை 21 நாட்கள் செய்து வர பிரச்சனை குணமாகும்.

குறிப்பு:-

இது போன்ற தோல் நோய் பிரச்சனைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அதற்கான கைவைத்தியம் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது இந்த  பிரச்சனைகள் குணமாவது சாத்தியம். ஆனால் இவை தீவிரமாகும் போது வெறும் கைவைத்தியம் மட்டும் அல்லாது மருத்துவரை அணுகுவதும் அவசியம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil

 

Advertisement