படிகாரம் மருத்துவ பயன்கள்
படிகாரம் பயன்கள் – சில காலங்களுக்கு முன்னெல்லாம் நமது வீட்டில் படிகாரத்தை முதலுதவிப்பெட்டிகளில் அதிகளவு காணப்படும். அதாவது சிறிய காயங்கள், உடல் வலி, சரும பாதுகாப்புக்கு, இருமல், மூல வியாதிக்கு, கண் பாதுகாப்புக்கு என்ற பல உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு அதிகளவு படிகாரம் மருத்துவ பயன்கள் பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த படிகாரம் முடி வளர்வதற்கு, சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்குவதற்கு. சீதபேதி சரியாக, மூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்த, வாய்ப்புண்ணை சரிசெய்ய, இருமல், தொண்டை புண் என்ற பலவகையான பிரச்சனைகளுக்கு இந்த படிகாரம் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சரி இந்த பகுதியில் படிகாரம் மருத்துவ பயன்கள் பற்றி இப்போது நாம் காண்போம்.
உடல் சூட்டினால் ஏற்படும் சீதபேதிக்கு படிகாரம் பயன்கள்:
- படிகாரம் பயன்கள் – சிறிய வெங்காயத்தில் சிறிது படிகாரத்தூளைக் கலந்து, அதை இருவேளை உண்டுவர, சூட்டினால் ஏற்பட்ட சீத பேதி பாதிப்புகள், சரியாகிவிடும்.
- இந்த படிகாரம் மருத்துவ பயன்கள் (padikaram uses in tamil) மிகவும் சிறந்த முறையாக விளங்குகிறது.
படிகாரம் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?
உடல் சூட்டினால் மூக்கில் ரத்தம் வடிவத்தை தடுக்கும்:
படிகாரம் பயன்கள் – உடல் சூட்டினால் சிலருக்கு, மூக்கின் வழியே இரத்தம் வழியும் பாதிப்பு ஏற்படும். படிகாரத்தூளை தண்ணீரில் கலந்து, அந்த நீரை, மூக்கில் ஓரிரு துளிகள் விட்டு, மூக்கின் மேல் படிகாரத் தண்ணீரில் நனைத்த ஒரு துணியை வைத்துவர, சிறிது நேரத்தில், மூக்கில் இருந்து இரத்தம் வடிவது நின்று விடும். இந்த படிகாரம் மருத்துவ பயன்கள் மிகவும் சிறந்த முறையாக விளங்குகிறது.
வாய்புண் சரியாக:
- படிகாரம் பயன்கள் – உடல் சூடு மற்றும் அதிக காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, சிலருக்கு வாய்ப்புண் ஏற்படக்கூடும், அவர்கள், கடுக்காய்த் தூளை, படிகாரத்தூளில் கலந்து, அவற்றை, வெதுவெதுப்பான நீரில் இட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் வாயைக் கொப்புளித்துவர, வாய்ப்புண் பாதிப்புகள் விலகிவிடும்.
- மேலும், மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டை சிறிது எடுத்து, நீரில் இட்டு கொதிக்கவைத்து, அதில் சிறிது படிகாரத்தூள் கலந்து, வாய் கொப்புளித்தும் வரலாம், வாய்ப்புண் உடனே ஆறிவிடும்.
இருமல் சரியாக:
- படிகாரம் பயன்கள் – சிலர் வெளியூர் அல்லது வேறு இடத்தில் தண்ணீர் பருகினால் உடனே அவர்களுக்கு இருமல் பிரச்சனை வந்து விடும்.
- இந்த இருமல் பிரச்சனையை சரிசெய்வதற்கு படிகாரம் (alum benefits) ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- எனவே படிக்காரத்தூளை சிறிதளவு தேனில் கலந்து நன்றாக குழைத்து, தினமும் இருவேளை என்று தொடர்ந்து சில நாட்கள் வரை சாப்பிட்டு வர இருமல் பிரச்சனை சரியாகும்.
- இந்த படிகாரம் மருத்துவ பயன்கள் (padikaram uses in tamil) மிகவும் சிறந்த முறையாக விளங்குகிறது.
தொண்டை புண் சரியாக:
படிகாரம் பயன்கள் – மாதுளம் பூ, மாதுளம் பட்டை சிறிது நீரில் இட்டு, கொதிக்க வைத்து, அத்துடன் படிகாரத்தூள் சிறிது சேர்த்து இருவேளை வாய் கொப்புளித்துவர, தண்ணீர் கூட விழுங்க முடியாமல் வேதனை தரும் தொண்டைப் புண் பாதிப்பு குறைந்து விடும்.
வயிற்றுப்புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!
மூக்கடைப்பு பிரச்சனையை சரிசெய்ய:
படிகாரம் பயன்கள் – சிறிது திப்பிலியை மண் சட்டியில் பாலை இட்டு ஊறவைத்து, கஸ்தூரி மஞ்சள் மற்றும் பாலில் ஊறிய திப்பிலியை தனித்தனியே அரைத்து, சந்தனக்கட்டையை கல்லில் தேய்த்து விழுதாக்கி, அத்துடன் சிறிது படிகாரத்தூளை சேர்த்து, நன்கு கலக்கி, தினமும் இருவேளை இதை சிறு உருண்டையாக்கி உட்கொள்ள, மூக்கடைப்பு குணமாகும். இதற்கு படிகாரம் மருத்துவ பயன்கள் (padikaram uses in tamil) மிகவும் சிறந்த முறையாக விளங்குகிறது.
பல் வியாதிகளுக்கு:
படிகாரம் பயன்கள் – கடுக்காய் தூள், பாக்குத்தூள் மற்றும் படிகாரத்தூள் இவற்றை, சேர்த்து வைத்துக்கொண்டு, தினமும் இந்த தூளில் பல் துலக்கிவர, பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பல் வியாதிகள் யாவும் விலகிவிடும்.
பல் ஈறுகளில் உள்ள காயங்கள் ஆற, படிகாரத்தூளை, தேனில் குழைத்து, பல் ஈறுகளில் தடவி வர, ஈறுகளில் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிடும்.
இரத்தக்கட்டுகள் கரைய:
படிகாரம் பயன்கள் – படிகாரத்தூள் மற்றும் செம்மண் இவற்றை முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து நன்கு அரைத்து, இரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில், பற்றிட, இரத்தக்கட்டுகள் உடனே கரைந்து விடும். இந்த படிகாரம் மருத்துவ பயன்கள் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.
கண் பாதிப்புகள் சரியாக:
- படிகாரத்தூளை முட்டையின் வெண் கருவில் கலந்து, அதை ஒரு மெல்லிய துணியில் நனைத்து, கண்களின் மேல் வைத்து கட்டிவர, கண் வலி உடனே குறையும்.
- படிகாரத்தூள் மற்றும் மஞ்சளை பன்னீரில் கலந்து ஊறவைத்து, காலைவில் அந்த நீரில், கண்களை அலசிவர, கண்களில் ஏற்பட்ட கட்டிகள் குணமாகி, கண்களில் ஏற்படும் சிவப்பு படலம் நீங்கிவிடும்.
- இதற்கு படிகாரம் மருத்துவ பயன்கள்மிகவும் சிறந்த முறையாக விளங்குகிறது.
படிகாரம் சாப்பிடலாமா:
படிகாரத்தை நேரடியாக உட்கொள்ள கூடாது. இது ஒரு வேதிபொருள். அதனால் இதனை நேரடியாக உட்கொள்வது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனை சில நேரங்களில் வெளிப்புறமாக பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக வாய் கொப்பளித்தல், காயம் ஆறுவதற்கு போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
படிகார பற்பம் சாப்பிடும் முறை:
படிகார பற்பத்தை தூளாக்கி, கொஞ்சமாக எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை 200 மில்லி கிராம் எடுத்து கொள்ளலாம்.
இதனை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. இதனை மேல் கூறியுள்ள அளவு விட அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. ஒருவேளை உங்களுக்கு இதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |