எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது?
பெரும்பாலானருக்கு உடல் நலக்குறைவால் உடல் வலி (pain) ஏற்படுவது இப்போது சாதாரண விஷயமாக உள்ளது.
இந்த உடல் வலி ஏற்படுவதற்கு காரணம் என்னவென்றால் உடல் அழுத்தமாக இருக்கலாம், உடல் இறுக்கமாக இருக்கலாம், ஊட்டச்சத்து உணவு முறையாக இருக்கலாம், ஒழுக்கற்ற வாழ்க்கை முறையாக இருக்கலாம், உடற்பயிற்சி என்று பல காரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.
இருப்பினும் உடல் வலி ஏற்படுவதற்கு முதல் காரணம் உடல் சரியாக இயங்காமல் இருந்தால் தான் உடல் வலி ஏற்படுகிறது.
இருப்பினும் நம் உடலில் ஏற்படும் சில வலிகளை அலட்சியமா விடக்கூடாது. சரி வாங்க நம் உடலில் ஏற்படும் சில வலிகளை ஏன் அலட்சியமாக விடக்கூடாது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
நெஞ்சு வலி:
பொதுவாக நெஞ்சு வலி உடல் அழுத்தம், ஊட்டச்சத்து உணவுகளால் இந்த நெஞ்சு வலி பொதுவாக ஏற்படும். இருப்பினும் நெஞ்சு வலி என்பது இதய நோய் வருவதற்கு முதல் அறிகுறி ஆகும்.
அதாவது இதயத்தின் துடிப்பு அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் இந்த நெஞ்சு வலி வரும். எனவே நெஞ்சு வலி வரும்போது தவறாமல் மருத்துவரை நாடுவது மிகவும் நல்லது.
தலை வலி:
பொதுவாக இந்த பிரச்சனை அனைவருக்குமே இருக்கின்ற ஒரு பிரச்சனை.
இந்த தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன குறிப்பாக மன அழுத்தம், தூக்கம் இன்மை என்ற இரண்டு காரணங்களினால் இந்த தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது.
இருப்பினது இந்த தலை வலி பிரச்சனையை அலட்சியமாக விடக்கூடாது. தலைவலி அதிகமாக இருந்தால் மூளை திசுக்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
எனவே தலை வலி அதிகமாக ஏற்படும் போது கண்டிப்பாக உடல் நல மருத்துவரை நாடுவது மிகவும் நல்லது.
அடி வயிற்று வலி:
அடி வயிற்று வலி பிரச்சனை அணைத்து வகை வயதினருக்கும் ஏற்படுகின்ற ஒரு விஷயம் தான், இருப்பினும் இந்த அடி வயிற்று பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தவறான டயட், தீவிரமான உடல் இறுக்கம் இது போன்ற காரணங்களினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
குறிப்பாக இந்த அடிவயிற்று பிரச்சனை பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிறது.
இருப்பினும் இந்த அடிவயிற்று வலி அதிகரித்து கொண்டே போனால் குடல் புண், வயற்று புண் மற்றும் கல்லீரலில் கற்கள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.
கால் வலி:
இப்போது அனைவருக்கும் இருக்கின்ற ஒன்று தான் கால் வலி.
ஆனால் இந்த கால்களிலும், மூட்டுகளிலும் வலிகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன என்றால் உடல் அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்ற இரண்டு முக்கிய காரணங்களினால் இந்த கால் வலி ஏற்படுகிறது.
முக்கியமாக இந்த கால் வலி பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமாக ஏற்படுகிறது.
இருப்பினும் இந்த கால் வலியுடன் வீக்கங்கள் ஏற்பட்டால் இரத்தக்கட்டு நோய் அல்லது மூட்டுவலி நோயாக இருக்கும் என்ற அறிகுறியாகும். எனவே அதிகளவு கால் வலி ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை நாடுவது மிகவும் நன்மையாகும்.
முதுகுவலி:
பெரும்பாலானவரை அதிகமாக தாக்கக்கூடிய ஒன்றுதான் இந்த முதுகுவலி, இந்த முதுகுவலிக்கு வயது வரம்பே கிடையாது.
அணைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான் இந்த முதுகுவலி. இந்த முதுகுவலி சாதாரணமாக அமைத்திருக்கும்போது ஏற்படலாம் அல்லது தூங்கும்போது கொழுப்பணுக்கள் சேர்வதினால் கூட ஏற்படலாம்.
இந்த முதுகுவலி அதிகமாக ஏற்பட்டால் கடைசியில் பக்கவாதத்தை ஏற்படுத்தி நம்மை படுத்தப்படுக்கையாக்கிவிடும். எனவே முதுகு வலி ஏற்பட்டால் கண்டிப்பாக தகுந்த மருத்துவரை நாடுவது மிகவும் நல்லது.
இந்த உடல் வலிகளை தவிர்த்து, நமக்கு ஏற்படும் கழுத்து வலி, பல் வலி என்ற அணைத்து வலிகளுயுமே அலட்சியம் படுத்தக்கூடாது, நம் உடல் ஏற்படும் எந்த வலியாக இருந்தாலும் சரி அந்த பிரச்சனைக்கான மருத்துவத்தை நாடுவது மிகவும் நல்லது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.