பலாப்பழம் கொட்டை நன்மைகள் | Palakottai Benefits in Tamil

Advertisement

Palakottai Benefits in Tamil

பலாப்பழம் எவ்வளவு பிடிக்குமோ அதே போல் பலாப்பழ விதைகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். பலாப்பழ விதைகளை சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இதில் சத்துக்களும் ஏராளமாக இருக்கிறது. இந்த பதிவில் பலாப்பழ விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பலாப்பழ விதை நன்மைகள்:

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

 பலாப்பழ விதையில் நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாத்து கொள்கிறது. மேலும் மலசிக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கிறது.  

பார்வை திறன் அதிகரிக்கும்:

பார்வை திறன் அதிகரிக்கும்

பலாப்பழ விதையில் வைட்டமின் ஏ நிறைந்துருப்பதால் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மாலைக்கண், கண்புரை, மாகுலர் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது.

பலாப்பழம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்க..

தசைகளை வலிமையாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது:

பலா விதையில் உள்ள புரத சத்து, தசைகளை வலிமையாக வைத்து கொள்ள உதவுகிறது.

முதுமை:

பலாப்பழ விதையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது. முகத்தில் ஏற்படும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கிறது. 

முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது:

முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது

பலா கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ முடி உதிர்வதை தடுக்கிறது.

இதில் உள்ள  புரதச்சத்து முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இரும்பு சத்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான கூந்தலுக்கு வழி வகுக்கிறது.

மேலும் இந்த விதைகளில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் முடி உதிர்வுக்கு மற்றொரு காரணம் ஆகும்.

கொழுப்பை குறைக்கிறது:

பலாக் கொட்டையில் உள்ள நார்ச் சத்து, கரோட்டினாய்டுகள், பீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துருப்பதால் கொலட்ஸ்ரால் அளவை குறைக்கிறது. மேலும் இதய பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்கும்.

தினமும் 2 க்கு மேல் டீ, காபி குடிப்பவரா நீங்கள் உங்களுக்கு ஆயுள் கெட்டி என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement