பேலியோ டயட் உணவுகள் | Paleo Diet Chart in Tamil

பேலியோ டயட் என்றால் என்ன?

Paleo Diet Chart in Tamil:- முதலில் இந்த பேலியோ டயட் என்றால் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். பேலியோ டயட் என்பது கற்கால உணவுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. இதை ‘பேலியோலித்திக் டயட்’ (Paleolithic diet) என்றும் ‘கற்கால டயட்’ என்றும் சொல்வார்கள்.

இந்த பேலியோ டயட் முறையில் காய்கறிகள், நட்ஸ், வேர்கள், இறைச்சி (ஈரல், மூளை) ஆகியவை அடங்கும். இந்த பேலியோ டயட்டில் இடம்பெறாதவை என்றால்  பால் சார்ந்த உணவுகள், தானியங்கள், சர்க்கரை, பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு, காபி மற்றும் மது ஆகிய உணவுகள் அடங்கும்.

`பேலியோ டயட், உடல் சுகாதாரத்தை மேம்படுத்தும்’ என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு தொடங்குவது சிறந்தது. இந்த டயட்டில் எதைச் சாப்பிடலாம், தவிர்க்கலாம் என்பதை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வழங்கும் முறையாகும்.

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை. சரி வாங்க பேலியோ டயட்டில் என்ன உணவுகள் எடுக்கொள்ளலாம்.. எது மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது என்பதை பற்றி கீழ் காணலாம்.

பேலியோ டயட்:

Paleo Diet Chart in Tamil

நீங்கள் எடையை குறைக்க பேலியோ டயட் இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அதில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து கொண்டு செயல்படுங்கள். ஏனெனில் நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது உங்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பேலியோ டயட் உண்ணகூடிய காய்கறிகள்

 1. காளிபிளவர்
 2. புரொக்கோலி
 3. முட்டைகோஸ்
 4. முள்ளங்கி
 5. பாகற்காய்
 6. காரட் (200 grams max. don’t take daily)
 7. பீட்ரூட் (200 grams max. don’t take daily)
 8. தக்காளி
 9. வெங்காயம்
 10. வெண்டைக்காய்
 11. கத்திரிக்காய்
 12. சுண்டைக்காய்
 13. வாழைத்தண்டு
 14. அனைத்துவகை கீரைகள்
 15. முருங்கை
 16. சுரைக்காய்
 17. ருபார்ப்
 18. ஆலிவ்
 19. செலரி
 20. வெள்ளரி
 21. சீமை சுரைக்காய்
 22. புடலங்காய்
 23. குடைமிளகாய்
 24. பச்சைமிளகாய்
 25. சிகப்பு மிளகாய்
 26. பூசணி
 27. காளான்
 28. தேங்காய்
 29. எலுமிச்சை
 30. பூண்டு
 31. இஞ்சி
 32. கொத்தமல்லி
 33. மஞ்சள்கிழங்கு
 34. அவகாடோ
 35. பீர்க்கங்காய்
வெந்தியம் ஒரு ஸ்பூன் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!

பேலியோ டயட் தவிர்க்கவேண்டிய காய்கறிகள்

 1. மரவள்ளி கிழங்கு
 2. சர்க்கரைவள்ளி கிழங்கு
 3. உருளை கிழங்கு
 4. பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
 5. சென்னா
 6. சுண்டல்
 7. பருப்பு வகைகள் அனைத்தும்
 8. பயறு வகைகள் அனைத்தும்
 9. நிலக்கடலை
 10. சோயா, மீல்மேக்கர்
 11. சோயா எந்த வடிவிலும் ஆகாது
 12. அவரைக்காய்
 13. பனங்கிழங்கு
 14. பலாக்காய்
 15. வாழைக்காய்
 16. பழங்கள் அனைத்தும்

பேலியோ டயட் விதிகள்:

 • மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே
 • சர்க்கரை, தேன், இனிப்புகள், கோக்/பெப்சி உணவகத்தில் சமைத்தது, பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் அனைத்தும் தவிர்க்கணும்
உடல் எடை குறைய உணவு அட்டவணை

பேலியோ டயட் உணவு அட்டவணை – Paleo Diet Chart in Tamil:

பேலியோ டயட் உணவுகள் – காலை:

 • 3 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லட் கூட உண்ணலாம் பிரச்சனை இல்லை. ஆனால் பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.

பேலியோ உணவுகள் மதியம்:

 • 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ். நெய்யில் வணக்கி உண்ணலாம், ஊறவைத்தும் உண்ணலாம். அல்லது
 • நட்ஸ் விலை அதிகம் என நினைப்பவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/ மட்டன் சூப் சாப்பிடலாம். அல்லது
 • பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.

பேலியோ உணவுகள் இரவு:

 • பாயில் / க்ரில் செய்த சிக்கன்/ மட்டன்/ மீன் சாப்பிடலாம். ஆனால் பசி அடங்கும் அளவுக்கு மட்டும் சாப்பிடுங்கள். வாணலியில் வறுத்தால் சமையல் எண்ணையாக நெய் பயன்படுத்தவும்.

ஸ்நாக்ஸ்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ் சாப்பிடலாம்.

தொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்

முட்டை சேர்த்த சைவ டயட்:

காலை:

 • 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி. பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.

மதியம்:

 • காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால் நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பை ஊற்றி உண்ணவும். காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய் (பசி அடங்கவில்லையெனில், அவசியமானால் மட்டும் தேங்காய் சேர்க்கவும்).

இரவு:

 • 4 முட்டை மட்டும் சாப்பிடலாம்.

ஸ்நாக்ஸ்: 1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/ தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்.

5 நாளில் உங்கள் எடை குறைய உருளைக்கிழங்கு தான் சிறந்த வழி..!

முட்டை சேர்க்காத பியூர்வெஜ் சைவ டயட்

காலை:

100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் .பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.

மதியம்:

காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். உடன் காய்கறி சாலட்/ காய்கறி சூப் ஏராளமாக பருகவும். அவகாடோவும் சேர்க்கலாம்.

இரவு:

முழுகொழுப்பு பாலில் செய்த பன்னீர் டிக்கா, பன்னீர் மஞ்சூரியன். பசி அடங்கும் அளவுக்கு சாப்பிட்டால் போதும்.

சமையல் எண்ணெய் நெய்/ பட்டர்/ செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/ செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்துங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil