இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது..!

Advertisement

Papaya Side Effects In Tamil

பப்பாளி பழம் எல்லா நேரங்களிலும் விலை குறைவாக கிடைக்க கூடிய ஒரு பழமாக இருக்கிறது. பப்பாளி பழம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும். பப்பாளி பழத்தில் வைட்டமின் A, C, E போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. மேலும், கரோட்டின் சத்துவும் அதிகம் உள்ளது. மனிதர்கள் பப்பாளி பழங்களை சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் தீர்வாக இருக்கும்.

மனிதர்கள் பழங்கள் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதுவே அளவுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளும் போது அல்லது உடலில் சில பிரச்சனைகள் இருப்பவர்கள் பப்பாளியை சாப்பிடும் போது ஒரு சில பக்கவிளைவுகள் ஏற்படும். அதனால் இன்றைய பதிவில் யாரெல்லாம் பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது என்று பார்க்கலாம் வாருங்கள்.

Papaya Fruit Benefits in Tamil

பப்பாளி பழத்தின் பக்க விளைவுகள்:

கருச்சிதைவு:

கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகள் கருக்கலைப்பை ஏற்படுத்தும். கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். இதனால் கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

குறைந்த இரத்த சர்க்கரை அளவு இருப்பவர்கள்:

பப்பாளி பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் குறைந்த இரத்த சர்க்கரை அளவு இருப்பவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லதல்ல. பப்பாளி பழம் நம் உடலில் உள்ள க்ளுகோஸ் அளவை குறைக்கும் என்பதால் குறைந்த இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. மேலும் இது குழப்பம், நடுக்கம் மற்றும் வேகமான இதயத் துடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அல்ர்ஜி இருப்பவர்கள்:

முழுமையாக பழுக்காத பப்பாளி பழத்தில் உள்ள பால் போன்ற தன்மை சிலருக்கு அல்ர்ஜியை ஏற்படுத்தும். இதனால் தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே பழுக்காத பப்பாளி பழத்தை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

வயிறு கோளாறு இருப்பவர்கள்:

பப்பாளி பழத்தில் நார்சத்து அதிகமாக இருப்பதால் இது வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று பிடிப்புகள், வயிறு வீக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே பப்பாளி பழத்தை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

மருந்து எடுப்பவர்கள்:

பிளட் தின்னர் எடுத்துக் கொள்பவர்களும் அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் நபர்கள் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஹீமோபிலியா மற்றும் த்ரோம்போசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதய கோளாறு இருப்பவர்கள்:

இதயக் கோளாறு இருப்பவர்கள் பப்பாளி பழத்தைச் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள பப்பேன் உங்களுடைய இதய துடிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே உங்களுக்கு இதய பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு பப்பாளியை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள்:

பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆனால் ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊட்டச்சத்தை அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வது கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும் என்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடாதீர்கள்.

Benefits of Drinking Papaya Juice Daily

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement